சென்னையில் “ஜம்போ சர்க்கஸ்’ தொடங்கியது

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகில் உள்ள எஸ்.ஐ.ஏ.ஏ. திடலில் ஜம்போ சர்க்கஸ் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை (டிச. 20) தொடங்கியது.

இந்த சர்க்கஸ் நிகழ்ச்சியை தமிழக தொழிலாளர் நலத்துறை அமைச்சர் கே.டி. பச்சமால் தொடங்கி வைத்தார்.

இது குறித்து சர்க்கஸ் ஏற்பாட்டாளர்கள் கூறியது:

சென்னையில் சர்க்கஸ் நிகழ்ச்சிகளுக்கு வரவேற்பு உள்ளது. இதனால் ஜம்போ சர்க்கஸ் சார்பில் சுமார் ஒன்றரை மாதம் சர்க்கஸ் சாகச நிகழ்ச்சிகளை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மதியம் 1 மணி, மாலை 4 மணி மற்றும் இரவு 7 மணி என தினமும் 3 காட்சிகளாக சர்க்கஸ் நடத்தப்படும். இதில் ரஷிய மற்றும் தென் ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து கலைஞர்கள் சாகசங்களை நிகழ்த்தவுள்ளனர். கண்கவர் வண்ண விளக்குகளின் ஒளியில் நடக்கும் இந்த சர்க்கஸில் நாய்கள், வெளிநாட்டு பறவைகள், விலங்குகள் ஆகியவற்றின் சாகசங்களும் இடம்பெறும்.

இதற்கான டிக்கெட்டுகள் ரூ.70, ரூ.120, ரூ.200, ரூ.300 ஆகிய விலைகளில் கிடைக்கும். ரூ. 200 மற்றும் ரூ. 300 டிக்கெட்டுகளை முன்பதிவு செய்தும் பெறலாம்.

டிக்கெட் முன்பதிவு போன்ற விவரங்களுக்கு 90425-17333 என்ற செல்போன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவித்தனர். தொடக்க நிகழ்ச்சியில் மேயர் சைதை துரைசாமி, நாடாளுமன்ற உறுப்பினர் ந. பாலகங்கா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Tags: , ,

Leave a Reply