சென்னையில் இஸ்லாமிய இலக்கிய கழக செயற்குழு கூட்டம்

iikஇஸ்லாமிய இலக்கியக் கழகச் செயற்குழுக் கூட்டம் 25-11-2017 அன்று காலை 11 மணிக்குச் சென்னை எஸ்-ஐஏஎஸ் அகாடமி அரங்கில் கழகத் தலைவர் சேமுமு தலைமையில் நடைபெற்றது.

நெறியாளர்கள் கேப்டன் அமீர் அலி, டாக்டர் சே.சாதிக் முன்னிலை வகித்தனர். நாகர்கோயில், திருநெல்வேலி, திருச்சி, பெரம்பலூர், ஈரோடு, புதுக்கோட்டை, அதிராம்பட்டினம், கோட்டைக்குப்பம் மற்றும் சென்னையைச் சார்ந்த 50 செயற்குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
பொதுச் செயலாளர் பேராசிரியர் அப்துல் சமது வரவேற்புரை வழங்கினார்.

பொருளாளர் எஸ்.எஸ. ஷாஜஹான் நன்றி கூறினார்.

கூட்டத்தில் நிறைவேற்றப் பெற்ற தீர்மானங்கள்:-

*சென்னையில் ஊடகப் பயிலரங்கம், தஞ்சை அய்யம்பேட்டையில் கருத்தரங்கம், குற்றாலத்தில் பேச்சுப் பயிலரங்கம் ஆகியன நடத்துவது
*சென்னையில் மாதமொருமுறை நூல் திறனாய்வு, வெளியீடு முதலியன நடத்துவது
*உலமாப் பெருந்தகைகள் கேட்டுக் கொண்டதற்கிணங்க ஆலிம்கள் தமிழ் மொழியில் செம்மையாக இலக்கணப் பிழையின்றி எழுதவும் பேசவும் தேர்ச்சி வகுப்புகள் நடத்துவது
*மாவட்டம்தோறும் கிளைகள் அமைத்து நிகழ்ச்சிகள் நடத்துவது
*2019ல் உலக இஸ்லாமியத் தமிழ் இலக்கிய மாபெரும் மாநாடு நடத்துவது
*அரசு வெளியிட்டுள்ள பாடத் திட்ட வரைவை ஆய்ந்து அதில் இஸ்லாத்திற்கு ஆட்சேபகரமான பகுதிகள் இருப்பின் அதனை அரசின் கவனத்திற்குக் கொண்டு செல்வது
*சென்னைப்பல்கலைக்கழகத்தில் இஸ்லாமியத் தமிழ் இலக்கிய இருக்கை உண்டாக்க மீண்டும் முயற்சிகள் மேற்கொள்வது
*ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் ஆண்டுதோறும் 20 தலித் சகோதரர்களுக்குத்தங்களது பிஎச்.டி., போன்ற ஆய்வுகளை நூலாக வெளியிட ₹20,000/-
தலா வழங்கும் திட்டத்தைச் சிறுபான்மையினர் நலத் துறை மூலம் முஸ்லிம் ஆய்வாளர்களுக்கும் விரிவுபடுத்திட அரசைக் கேட்டுக்கொள்வது
மேற்கண்ட தீர்மானங்கள் செயலாக்கம் பெற அனைவரும் தங்கள் ஆதரவையும் ஒத்துழைப்பையும் தருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். iik1

Tags: , ,

Leave a Reply