சுவர் இடிந்து விழுந்து விவசாயி சாவு

முதுகுளத்தூர் அருகே கீழத்தூவலில் தொடர்மழை காரணமாக வீட்டில் உள்ள மண்சுவர் இடிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்தார்.

ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் அருகே உள்ள கீழத்தூவலைச்சேர்ந்த சேர்வைக்காரர் மகன் கண்ணன் (42) விவசாயி. இவர் ஞாயிற்றுக்கிழமை இரவு தனது ஓட்டு வீட்டில் தூங்கிகொண்டிருந்தார்.

நள்ளிரவில் பெய்த மழை காரணமாக வீட்டின் மண்சுவர் இடிந்து விழுந்ததில் கண்ணன் படுகாயமடைந்தார். உடனே அவருக்கு பரமக்குடி மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்பு, மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தார்.

இதுகுறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

Tags: , , ,

Leave a Reply