“சுற்றுலாப் பயணிகளுக்கு ராமேசுவரம்-திருப்பதி ரயில் வரப் பிரசாதம்’

ராமேசுவரம், ஜூலை 23: ராமேசுவரம் – திருப்பதி எக்ஸ்பிரஸ் ரயில் பக்தர்கள், சுற்றுலாப் பயணிகளுக்கு வரப் பிரசாதம் என ஜவுளித் துறை அமைச்சர் எஸ். சுந்தர்ராஜ் திங்கள்கிழமை தெரிவித்தார்.
ராமேசுவரத்தில் இருந்து திருப்பதிக்கு வாரம் 3 முறை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் போக்குவரத்துத் தொடக்க விழா, ராமேசுவரம் ரயில் நிலையத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. இவ்விழாவில் எஸ். சுந்தர்ராஜ் பேசியதாவது:
ராமேசுவரம், திருவண்ணாமலை மற்றும் திருப்பதி ஆகிய 3 புனிதத் தலங்களையும் இணைக்கும் ராமேசுவரம்- திருப்பதி எஸ்க்பிரஸ் ரயில் போக்குவரத்து சேவை, பக்தர்கள், சுற்றுலாப் பயணிகளுக்கு கிடைத்திருக்கும் வரப் பிரசாதமாகும்.
இதேபோல், பயணிகள் நலன் கருதி ராமேசுவரம் – சென்னைக்கு பகல் நேரத்தில் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கவும், கிடப்பில் உள்ள ராமேசுவரம் – கோவை பயணிகள் ரயிலைத் தொடக்கிடவும் ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
Tags: , , , ,

Leave a Reply