சுதந்திரம் எங்கே?

சுதந்திரம் எங்கே?
சத்தியாகிரகம் செய்து வாங்கிய
சுதந்திரத்தை குடிமக்கள்
சாராயக்கடைகளில் தொலைத்து விட்டோம்!அகிம்சையால் அடைந்த சுதந்திரத்தை
அணைக்கட்டுப் பிரச்சினைக்கு
ஆட்படுத்திவிட்டோம்!

போராடிப்பெற்ற சுதந்திரத்தை
பாலியல் தொல்லைகளுக்கு
பலியாக்கிவிட்டோம்!

வீர்ர்களையிழந்து  வென்ற சுதந்திரம்
வெடிகுண்டுகளுக்கு இரையாகிப் போகிறது!

இலக்குகளை அடையப்பெற்ற சுதந்திரம் இலஞ்ச ஊழல்களுக்குப்
பங்கீடாகிறது!

சமாதானமாக நாம்பெற்ற சுதந்திரம்
சாதிமதச் சண்டைகளில்
சருகாகிக் கொண்டிருக்கிறது!

வெள்ளையனை வெளியேற்றிவிட்டு
தீவிரவாத்த்திற்கு இடம்கொடுத்துள்ளோம்!
நாடாளவந்த தலைவர்களை
துப்பாக்கிக்குண்டுகளுக்குத்
தொலைத்துவிட்டோம்
சுதந்திரம் எங்கே?

அத்தனை குறைகளையும் களைவோம்!
ஆனந்த சுதந்திரம் காண்போம்!
அப்துல்கலாமின் கனவான
“இந்தியாவை வல்லரசாக்குவோம்”

சுதந்திர இந்தியாவாக
சுத்தமான இந்தியாவாக
உருவாகிட வாழ்த்தும்

காரைக்குடி. பாத்திமா ஹமீத்
ஷார்ஜா

Tags: 

Leave a Reply