சிறுபான்மை மாணவர் கல்வி உதவித் தொகைக்கு தேதி நீட்டிப்பு

தமிழகத்தில் சிறுபான்மையினர் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்க அக்.15ம் தேதி வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.அரசு, அரசு உதவி பெறும், அங்கீகரிக்கப்பட்ட தனியார் கல்வி நிலையங்களில் ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை கல்வி பயிலும் சிறுபான்மை வகுப்பை சேர்ந்த இஸ்லாமிய, கிறிஸ்தவ, சீக்கிய, புத்தமதத்தினர், பார்சி, ஜெயின் மதங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.

இவர்கள் பள்ளி, உயர்கல்வி தகுதி, வருவாய் அடிப்படையில் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு நீட்டிக்கப் பட்டுள்ளது. 1 முதல் 8ம் வகுப்பு மாணவ, மாணவிகள் விண்ணப்பங்களை தாங்கள் பயிலும் கல்வி நிலையங்களில் செப்.25க்குள் சமர்ப்பிக்க வேண்டும். 9ம் வகுப்பு முதல் பி.எச்டி., மற்றும் தொழில் நுட்ப கல்வி பயிலும் மாணவர்கள் ‘ஆன்லைன்’ மூலம் www.scholarships.gov.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்க வேண்டிய காலக்கெடு அக்.15ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
Tags: , , ,

Leave a Reply