சிறுபான்மையினர் உரிமைகள் தின விழா

மாநில அரசின் சார்பாக சிறுபான்மை மற்றும் பிற்படுத்தப்பட்டப்பட்ட சமூகங்களுக்காக நலத்திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திடவும், நலத்திட்ட உதவிகள் வழங்கிடவும் வருடம் தோறும் சிறுபான்மையினர் உரிமைகள் தின விழா மாநிலத்தின் அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலங்கங்களிலும் இந்த மாதம் நடத்தப்பட்டு வருகிறது.

கோவையில் இந்நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (18/12/2017) மாலை 4 மணிமுதல் நடைபெற்றது. இந்நிகழ்வில் கோவை மாவட்டத்தின் அனைத்து ஜமாஅத்தின் பிரதிநிதிகள், பள்ளி நிர்வாகிகள், மகளிர் அமைப்புகள் உட்பட கிறித்துவ சமூகத்தை சார்ந்த தலைவர்கள் மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களின் பிரதிநிதிகள் என 300 நபர்கள் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்வில், சிறுபான்மையினருக்கான வழிபாட்டு உரிமைகளை பாதுகாத்திடவும், புதிய பள்ளிவாயில்கள் மற்றும் சிறுபான்மையினர் வழிபாட்டுத்தலங்கள் கட்டிட அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது, எனவே அனைத்து மதத்தவருக்கான வழிபாட்டு உரிமைகளை பாதுகாத்திடும் வகையில் அனுமதிகளை வழங்கிட வேண்டும், கரும்புக்கடை போன்ற முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் அம்மக்களுக்கான அடிப்படை வசதிகளை (அரசு உயர்நிலைப்பள்ளி, நூலகம், ஆரம்ப சுகாதார நிலையம், தேசிய உடமையாக்கப்பட்ட வங்கியின் கிளை, பூங்கா, விளையாட்டு மைதானம்) மேம்படுத்துதல் மற்றும் வெள்ளலூர் பகுதியில் புதிதாக குடியமர்த்தப்பட்ட முஸ்லிம்களுக்கான பள்ளிவாயில் மற்றும் மதராஸா கட்டிட அனுமதி வழங்குதல் போன்ற கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டது.

மேலும் சிறுபான்மையினருக்கு அரசு நலத்திட்டங்கள் முழுமையாக சென்றடையாததால் அதற்கென ஒதுக்கப்படும் தொகைகள் தேக்கம் அடைந்து திரும்ப அனுப்பப்படுகிறது, மேலும் சிறுபான்மையினருக்கு வங்கிகளின் மூலமாக சிறுபான்மை நலத்துறை வழங்கிடும் கடன் வசதிகள் கிடைப்பதில்லை இவைகளை அதிகாரிகள் விரைவில் சீர்படுத்திட வேண்டும் எனவும் கோரிக்கையளிக்கப்பட்டது,

இந்நிகழ்விற்கு மாவட்ட ஆட்சியர், மாவட்ட வருவாய் அதிகாரி மற்றும் மாவட்ட சிறுபான்மை மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நல அதிகாரி யாரும் வராததால் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் திரு. இரா. செந்தில்வேல் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் த நலத்திட்ட உதவிகளும் வழங்கப்படவில்லை.

கோவை மாநகர ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் சார்பாக அதன் மக்கள் தொடர்புச் செயலாளர் ஜனாப். M. அப்துல் ஹக்கீம் மற்றும் ஊடகச் செயலாளர் சகோ. முஹம்மது அனீஸ் ஆகியோர் கலந்துகொண்டனர்.


MESSAGE FROM

 
S. முஹம்மது அனீஸ்
ஊடகச் செயலாளர்
ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த்,
கோவை மாநகரம்
Ph: 90479 42277
Tags: , ,

Leave a Reply