சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகத்தின் முத்தமிழ் விழா 2018 போட்டிகள்

சிங்கப்பூர்த்தமிழ்எழுத்தாளர்கழகத்தின்முத்தமிழ்விழா 2018போட்டிகள்

 

சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம் தனது முத்தமிழ் விழாவை வரும் ஏப்ரல் மாதம் நடைபெறும் தமிழ் விழாவின் ஒரு பகுதியாக இவ்வாண்டும் நடத்தவிருக்கிறது. ஏப்ரல் மாதம் 7ஆம் தேதி சனிக்கிழமைமுத்தமிழ் விழா நடைபெறும். முத்தமிழ் விழாவை ஒட்டி ஆண்டுதோறும் பொதுமக்களுக்கு இலக்கியப் போட்டிகள் நடத்துவது வழக்கம். ஆகவே இவ்வாண்டுஇரண்டுபோட்டிகளைநடத்தவிருக்கிறோம். ஒன்றுசிறுகதைப் போட்டி; மற்றொன்றுகுழந்தைப்பாடல்கள்போட்டி.

 

பரிசுகள் – சிறுகதை

முதல் பரிசு $500; 2ஆம் பரிசு $300; 3ஆம் பரிசு $200. 3 ஊக்கப் பரிசுகள் ஒவ்வொன்றும் $100.

 

குழந்தைப்பாடல்கள்

முதல் பரிசு $300; 2ஆம் பரிசு $200; 3ஆம் பரிசு $100. 3 ஊக்கப் பரிசுகள் ஒவ்வொன்றும் $75.

 

சிறுகதைக்கான விதிகள்

கதைக் கரு எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் கதைகள் சிங்கப்பூர்ச் சூழலில், நடப்பதாக அமைந்திருக்க வேண்டும். கதைகள் 1,200 வார்த்தைகளுக்குக் குறையாமலும் 1,500 வார்த்தைகளுக்கு மிகாமலும் இருக்க வேண்டும். ஒருவர் அதிகபட்சமாக 3 கதைகள் அனுப்பலாம். ஒவ்வொரு கதைக்கும் அசல் ஒன்றுடன் மூன்று நகல்கள் (1+3) கட்டாயம் அனுப்ப வேண்டும். 4 பிரதிகள் இல்லாத கதைகள் நிராகரிக்கப்படும்.

 

குழந்தைப்பாடல்களுக்கான விதிகள்

பாடல்கள் “கைவீசம்மாகைவீசு, கடைக்குப்போகலாம்கைவீசு”, “சாய்ந்தாடம்மாசாய்ந்தாடு”என்பனபோன்றுஆங்கிலத்தில்ரைம்ஸ்என்றுசொல்வார்களேஅதுபோல்இருக்கவேண்டும். ஒவ்வொருபாடலும் 8 முதல் 10 அடிகளுக்குள்இருக்கவேண்டும். ஒவ்வொருவரும்அதுபோல் 5 பாடல்களைஅனுப்பவேண்டும். ஒவ்வொருபாடலுக்கும் அசல் ஒன்றுடன் மூன்று நகல்கள் (1+3) கட்டாயம் அனுப்ப வேண்டும். ஆக 5 பாடல்களுக்கும்மொத்தம் 15 பிரதிகள் அனுப்பவேண்டும்.அந்த 5 பாடல்களின்அடிப்படையில்பரிசுக்குரியவர்கள்தெரிவுசெய்யப்படுவர்.இந்தப்பாடல்களைப்பின்னர்இசைவட்டாகவெளியிடும்திட்டமும்உண்டு.

 

பொதுவான விதிகள்

  1. சிங்கப்பூர்க் குடியுரிமை பெற்றவர்களும் நிரந்தரவாசிகளும் மட்டுமேபோட்டியில் பங்கேற்கலாம்.
  2. எழுத்தாளர் கழகச் செயற்குழு உறுப்பினர்களில் தலைவர், துணைத் தலைவர், செயலாளர், துணைச் செயலாளர், பொருளாளர் பதவிகளில் இருப்போர் மட்டும் போட்டியில் பங்கேற்க முடியாது. மற்ற செயலவை உறுப்பினர்கள் பங்கேற்கலாம்.
  3. கதைகளும்பாடல்களும் எழுதப்பட்டுள்ள தாள்களில் பெயரோ மற்ற விவரங்களோ எழுதக் கூடாது. பெயர், முகவரி, அடையாள அட்டை எண், தொடர்பு எண்கள் போன்றவற்றைத் தனித் தாளில் எழுதி கதையுடன் அனுப்ப வேண்டும்.
  4. அத்துடன் அடையாள அட்டையின் இருபக்க நகலும் இணைக்கப்பட்டிருக்க வேண்டும். அந்த விவரங்கள் இல்லாத படைப்புகள் போட்டியில் சேர்த்துக்கொள்ளப்பட மாட்டா.
  5. படைப்புகளைக் கூடியவரை கணினியில் அச்சிட்டு அனுப்ப வேண்டும். எழுதி அனுப்பினால் கையெழுத்து, புரியும்படி தெளிவாக இருக்க வேண்டும். அச்சிட்டாலும் எழுதினாலும் தாளின் ஒரு பக்கத்தில் மட்டுமே இருக்க வேண்டும். இரு பக்கங்களிலும் இருக்கக்கூடாது.
  6. சிறுகதையோபாடல்களோதன்னுடையதுதான் என்றும் வேறு எந்த ஊடகத்திலும் வெளியாகவில்லை என்றும் உறுதிக் கடிதம் இணைக்கப்பட வேண்டும்.
  7. போட்டி குறித்த நடுவர்களின் முடிவே இறுதியானது.

 

சிறுகதைகளையும்பாடல்களையும்சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம், BLK 723 # 13-149,Yishun Street 71, Singapore 760723 எனும் முகவரிக்கு 28.02.2018க்குள்வந்து கிடைக்கும்படி அனுப்ப வேண்டும். மேல் விவரங்களுக்கு சுப. அருணாசலம் 93221138; கிருத்திகா–90602644, ஆகியோரைத் தொடர்பு கொள்ளலாம்.

Tags: 

Leave a Reply