சிங்கப்பூர் தமிழர்கள்

கிறிஸ்து பிறப்பதற்கு முன்னரே தென்கிழக்கு ஆசிய நாடுகளில் இந்து சமயம் பல நூற்றாண்டுகளுக்கு முன்னமே தமிழர்கள் சமயம் பரவியுள்ளது.
 தமிழ் பின்புலத்துடன் சிங்கப்பூரில் வசிக்கும் தமிழர்களை சிங்கப்பூர் தமிழர் என்பர். காலனித்துவ காலப்பகுதியில் (1800 களில்) பிரிட்டிஸ் அரசால் வேலை
செய்வதற்கென்று தமிழ்நாட்டில் இருந்து அழைத்து செல்லப்பட்டவர்களின் வம்சாவழியினரே, பெரும்பாலான சிங்கப்பூர் தமிழர்கள் ஆவார்கள். கணிசமான
 தொகையினர் யாழ்ப்பாணத்தில் இருந்தும் இங்கு வரவழைக்கப்பட்டவர்கள்.
சிங்கப்பூர்   ஜனத்தொகை 5. 3 மில்லியன். இதில் இந்தியர்கள் 9 % சதவீதம், தமிழர்கள் 3 இலட்சம். இருந்த போதும்
சிங்கப்பூரில் தமிழ் ஒர் அரசு அங்கீகாரம் பெற்ற மொழியாக இருக்கின்றது.
13 -ஆம் நூற்றாண்டில் ஸ்ரீ விஜய சாம்ராஜ்யமாக இருந்தபோது, துமாசிக் என்ற பெயரில் சிங்கப்பூர் விளங்கியது.   சிங்கப்பூரின் கடைசி
மன்னர் பரமேஸ்வரா அரேபிய வணிகர்களின் உந்துதால் சிங்கப்பூர் வந்துள்ளான். ஆயினும், சிங்கப்பூரின் பெருமை 20 -ம் நூற்றாண்டில்தான் உலகறியப்படுகிறது.
தமிழகத்திலிருந்து வாணிப நிமித்தமாகவும், வேலை செய்யவும் இந்திய வம்சாவயினர் சிங்கப்பூர் வந்துள்ளனர். 1825 – லிருந்து 1873 வரை பிரிட்டிஷாரின்
இந்தியக் கைதிகளுக்கான ஒரு தண்டனை நிலையமாக இருந்தது. தண்டனை முடிந்து விடுதலை பெற்ற பிறகு இவர்கள் சிங்கப்பூரிலேயே தங்கிவிட்டனர்.
இப்படி 18-ம் நூற்றாண்டில் புலம் பெயர்ந்த தமிழர்கள் குடியேறியுள்ளார்கள்.அதற்கு சாட்சியாக அவர்கள் எழுப்பிய கோயில்கள் இன்று பிரசித்தி. தமிழன் புதிதாக ஒரு திணைக்குள் புகும் போது, அதாவது இந்தியாவை விட்டு வேறொரு நாட்டிற்குக் குடி புகும் போது அகத்திணை அவனுள் ஏற்படுத்தும் உளைச்சலின் விளைவாக கருப்பொருளைக் கண்டு புதியதாக ஒரு ஒழுங்கை , அமைப்பை நாடினான். அந்த ஒழுங்கும் அமைப்பும் குல தெய்வ வழிபாடு.குல வழிபாட்டின் வெளிபாடு கோயில்
சிங்கப்பூர் என்பது சீனர்கள், மலாய்க்காரர்கள், இந்திய இனங்கள்  கூட்டாக வாழும்  இடம். இவ்வினங்களுக்குள் பகைமையும், வேற்றுமையும் இனப்பூசல் இல்லாமல் இணக்கமாக இருக்கும் வண்ணம் உருவாகியுள்ளது. சீனர்களின் தொன்மையான சம்ய வழக்குகளுடன் தமிழர்களின் சமய வழக்குடன் ஒத்துப் போனதாய் உள்ளது
இதன் பயனாக இந்த நாடுகளில்  தம்ழித் திருவிழாக்களில் எந்த மனத்தடையும் இல்லாது சீனர்கள் பங்கு கொள்ள முடிகிறது.  தைப்பூசம் போன்ற சமய விழாக்களில்சீனர்களும் அலகு குத்தி காவடி எடுப்பதில் தங்களை முழுமயாக ஈடுபடுத்திக்கொள்கிறார்கள்.
சிங்கப்பூரின் தேசிய மொழி மலாய் மொழி. நாட்டின் அதிகாரத்துவ  மொழியாக சீனம், மலாய், தமிழ் ஆங்கிலம் விளங்குகிறது. ஆங்கிலம் அலுவலக் மொழியாக விளங்குகிறது. சிங்கப்பூரின் தமிழ்  இலக்கிய வரலாறு 1872 -ல் தொடங்குகிறது, கவிதை,கதை, கட்டுரை என இலக்கிய வரலாறு சிங்கப்பூருக்கு உண்டு. 19-ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்திலிருந்து கவிதை கலாச்சாரம் ஒட்டியே வளர்ந்து எனலாம். சிங்க‌‌ப்பூர் த‌மிழ‌ர்க‌ள் த‌ங்க‌ள் தாய் மொழியான‌ த‌மிழை வீட்டு மொழியாக பேசி வருகிறார்கள். ஆனாலும் இன்றைய இளையர்கள் ஆங்கிலத்திலேயே அதிகம்
உரையாடுகிறார்கள். வெளி உலகில், நடைமுறை வழக்கில், அக்கம் பக்கம் வேற்று இனத்தாரிடம் தொடர்பு மொழியாக  ஆங்கிலம் சரளமாக பேசுவதால் வீட்டில் தமிழில் பேசுவது சிரமப்படுகிறார்கள்
சிங்கப்பூர்  அரசு கலை வளர்ச்சிக்கு ஊக்கமளிக்கும் பல திட்டங்களை தீட்டி நடைமுறைபடுத்தி வருகிறது. தமிழ் நாடக விழா,  ஊக்கமளிக்கிறது. தமிழர்களுக்கு 24 மணி நேரமும்  தமிழ் வானொலி ஒலிக்கிறது. தமிழ் தொலைக்காட்சி
(” வசந்தம் “) வசந்ததுடன் மணம் பரப்புகிறது.
சிங்கப்பூரில்  36  இந்திய அமைப்புகள் செயலபட்டு வருகிறது. ஆசிரியர் சங்கம், எழுத்தாளர்  சங்கம்,கலைஞர் சங்கம், தமிழர் பேரவை, நற்பணி மன்றம் போன்ற இயக்கங்கள் தமிழர்களின் நலனை, மொழியை கவனித்து வருகிறது.கடந்த
2001 ஆண்டு சிங்கப்பூர் கல்வி அமைச்சு தமிழ் மொழி வளர்ச்சிக்கு  ”வளர் தமிழ் ”  என்ற அமைப்பினை அமைத்துள்ளது. பள்ளிகளில் தமிழ் கற்றல், கற்பித்தல் என்ற குழுவினை உருவாக்கியுள்ளது.
  ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதம் தமிழ் மொழிக்கு சிறப்பான விழாவாக  கொண்டாடப்படுகிறது. இவ்விழானை இயல்,
இசை, நாடகம் எனும்  “முத்தமிழால்” கொண்டாடுகிறது.  பொதுமக்கள், மாணவர்கள் என்று எல்லோராலும் கொண்டாடி மகிழ்கிறார்கள்.
“ தமிழ் பேசுவோம் “ – “ தமிழை நேசிப்போம் “ – என்பதே இதன் தாரக மந்திரம். ஒரு மாதம் …, அறிஞரகள் பேச்சு, மாணவர்களின் பேச்சு போட்டி, நாடகம், நாட்டியம், போன்ற கலை நிகழ்ச்சிகள்,  40 நிகழ்வுகள் இந்த விழாவில் நடத்தப்படும். இதன் வழி சிங்கப்பூரில் தமிழ் வாழும் மொழியாக வாழ்கிறது,
அனைத்து சிங்கப்பூர்களும் வாழ்வதற்குரிய நகரமாகவும், நேசத்திற்குரிய இல்லமாகவும் உருவாக அர்சு பலதரப்பட்ட முயற்சிகளை மேற்கொண்டு இருக்கிறது. மக்களுக்கு உயர்ந்த வாழ்க்கை தர,வழங்க பசுமை நிறைந்த இடமாகவும் சிங்கப்பூர் அமைந்துள்ளது. உள்ளூர்கலைஞர்களுக்கும் கலைக் குழுக்களுக்கும் அவர்கள் திறன்களை வெளிப்படுத்தவும், அவரவர் கலாசார, சமூகம் உறவுகள் காக்கப்படுகிறது.

அன்பொடு
கிருஷ்ணன்,
சிங்கை
தமிழ் எமது மொழி
இன்பத்தமிழ் எங்கள் மொழி

………………..
http://ezilnila.com/saivam
http://singaporekovilgal.blogspot.com/

Tags: ,

Leave a Reply