சிங்கப்பூரின் தந்தை திரு லீ குவான் யூ மறைவுக்கு ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்கத்தினர் அஞ்சலி

சிங்கப்பூரின் தந்தை திரு லீ குவான் யூ மறைவுக்கு

ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்கத்தினர் அஞ்சலி

 

திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்கம் (சிங்கப்பூர் கிளை)யின் உறுப்பினர்கள், சிங்கப்பூர் தெம்பனிஸ் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரும், உள்துறை மற்றும் வெளியுறவு அமைச்சின் மூத்த துணை அமைச்சரருமான ஜனாப் ஹாஜி மசகோஸ் ஜூல்கிஃபிலியுடன் இணைந்து, சிங்கப்பூரில் அமைக்கப்பட்டுள்ள அனுதாபக் கூடத்தில், சென்ற வெள்ளிக்கிழமை 27-03-2015 அன்று, ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தி, அவர்களின் இறுதி மரியாதையைத் தெரிவித்தனர்.

“சிங்கப்பூரில் தமிழை ஆட்சி மொழியாக்கி, தமிழையும் தமிழர்களையும் செழிப்போடு வாழ வகைச்செய்த திரு லீ, ஒவ்வொரு உள்ளத்திலும் என்றென்றும் வாழ்ந்துகொண்டேயிருப்பார். அவரது ஆத்மா சாந்தியடையட்டும்” என்ற குறிப்பை இரங்கல் புத்தகத்தில் பதிவு செய்தார்,சங்கத்தின் தலைவர் முனைவர் முஹிய்யத்தீன் அப்துல் காதர். சிங்கப்பூரின் தந்தையாகவும்,இவ்வுலகின் விந்தையாகவும் வாழ்ந்துகாட்டிய உன்னத மாமனிதர் திரு லீ குவான் யூ என்று அச்சங்கத்தினர் புகழாரம் சூட்டினர்.

*******

செய்தி: முனைவர் முஹிய்யத்தீன் அப்துல் காதர்

தலைவர், ஜமால் முகம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்கம்

(சிங்கப்பூர் கிளை)

Tags: 

Leave a Reply