சாதனையாளர்களுக்கு விருது வழங்கும் விழா

ராமநாதபுரத்தில் ஞாயிற்றுக்கிழமை நடந்த தங்க மண்டல மாநாட்டில் பல்வேறு துறைகளில் சாதனை புரிந்தவர்களுக்கு முன்னாள் குடியரசுத்தலைவர் ஏ.பி.ஜே.அப்துல்கலாமின் அறிவியல் ஆலோசகர் வி.பொன்ராஜ் விருதுகளை வழங்கினார்.

ராமநாதபுரம் என்.ஆர். திருமண மண்டபத்தில் அரிமா சங்கங்களுக்கான தங்க மண்டல மாநாடு, மண்டலத் தலைவர் அபர்ணா.ஆர்.வெங்கடாசலம் தலைமையில் நடைபெற்றது. சங்கத்தின் முன்னாள் மாவட்ட ஆளுநர்கள் கே.தனபாலன், டாக்டர்.எஸ்.ராஜேந்திரன், உடனடி முன்னாள் ஆளுநர் உபல்ட்ராஜ் மெக்கன்னா ஆகியோர் முன்னிலை வகித்தனர். அரிமா சங்க மாவட்டத் தலைவர் ஆடிட்டர் எம்.ஏ.சுந்தர்ராஜன் வரவேற்றார். மாநாட்டினை அரிமா சங்க மாவட்ட ஆளுநர் சிவகாமி எஸ்.ஆறுமுகம் துவக்கி வைத்துப் பேசினார்.

விழாவில் அரிமா சங்க செயலாண்மைக் குழுத் தலைவர் ஏ.எம்.சண்முகசுந்தரத்துக்கு, விபத்தில் பாதிக்கப்பட்ட பலருக்கும் உதவி செய்தமைக்காக சிறந்த சமூக சேவகர் விருதும், 3147 பேரிடம் கண்கள் தானமாகப் பெற்றுத்தந்த சிவகாசி டாக்டர். கணேஷுக்கு சிறந்த சமூகநல சீர்திருத்தவாதி விருதும் வழங்கப்பட்டது. உலக அளவில் தன்னார்வ ரத்ததேவைக்கான சேவையாற்றும் இணையதளமான எப்.2.எஸ்.அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் ஏ.வி.சதீஷ்குமார் தலைமையிலான அணிக்கும். ரத்ததான முகாம்களை ஒருங்கிணைத்து செயல்பட்டதாக ஆசிரியர் எஸ்.ஐயப்பனுக்கும் விருதுகள் வழங்கப்பட்டன.

கண்தான சேவையில் ஈடுபட்ட பரமக்குடி சண்.கமலக்கண்ணனுக்கும், கணினி கல்வியில் சிறந்து விளங்கியமைக்காக ஜி.கே.முருகனுக்கும் விருதுகளை முன்னாள் குடியரசுத்தலைவர் ஏ.பி.ஜே.அப்துல்கலாமின் அறிவியல் ஆலோசகர் வி.பொன்ராஜ் வழங்கி பாராட்டிப் பேசினார். பின்னர் கலைநிகழ்ச்சிகளில் பங்கேற்ற சிறுவர், சிறுமியருக்கும் சங்கத்தின் சார்பில் பரிசுகள் வழங்கப்பட்டன.

விழாவில் பரமக்குடி அரிமா சங்க நிர்வாகிகள் டாக்டர்.கே.பாண்டியன்,

சௌந்தரநாகேசுவரன், கண்ணப்பன், ராமமூர்த்தி, ராமநாதபுரம் அரிமா சங்க நிர்வாகி குழ.விவேகானந்தன் மற்றும் திருச்செந்தூர், தூத்துக்குடி, திருநெல்வேலி, மண்டபம்,கீழக்கரை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அரிமா சங்க நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.

Tags: , ,

Leave a Reply