சவூதி மற்றும் வெளிநாட்டவருக்கான குறைந்த கட்டண ஹஜ் ஏற்பாடு…

சவூதி மற்றும் வெளிநாட்டவருக்கான குறைந்த கட்டண ஹஜ் ஏற்பாடு…
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..
சவூதி அரேபியா ஹஜ் அமைச்சகத்திலிந்து குறைந்த கட்டண ஹஜ் பயணத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டு, அதற்கான அரசகுடும்பத்தின் அரசணை எண்: (M / 58) and 28 / 10/1426 AH) உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் உள்நாட்டிலிருந்து குறைந்த கட்டணத்தில் ஹஜ் செல்லும் வாய்ப்பை சவூதியைச் சேர்ந்த மைந்தர்களும் மற்றும் வெளிநாட்டினரும் பயன்பெறுவார்கள்.
கடந்த ஆண்டு 19ஆயிரம் பேர் அனுமதிக்கப் பட்டிருந்தனர் இந்த ஆண்டு 41ஆயிரம் பேர் ஹஜ் செல்ல இந்தச் சலுகை திட்டத்தின் கீழ் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஆன்லைன் மூலம் இதற்கான பதிவு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
வலைத்தள முகவரி: http://locallowfare.haj.gov.sa/
பதிவு செய்யும் அனைத்து விபரங்களும் வலைத்தளத்தில் உள்ளன. பதிவு செய்தவர்கள் 48 மணிநேரத்தில் அவர்களுக்குரிய கட்ணத்தை செலுத்தி பயணத்தை உறுதி செய்து கொள்ளவும்.
நிபந்தனைகள்.
1) இடைப்பட்ட 5 ஆண்டுகளில் ஹஜ் செய்திருக்கக்கூடாது.
2) 15 வயதிற்கு மேல் உள்ளவர்களுக்கு மட்டுமே அனுமதி.
3) பெண்கள் தங்களின் மஹரத்துடன் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.
4) ஒருவர் ஆன்லைனில் 10 பேர்களுக்கு மேல் பதிவு செய்ய அனுமதியில்லை.
வழங்கும் சேவைகள்.
போக்குவரத்து வாகனம்:
புறப்படும் இடத்திலிருந்து மற்றும், மினா, அரபா, முஸ்தலிபா.
உணவு:
மினாவில், காலை, மதியம் மற்றும் இரவு உணவுகளுடன் தேனீர்.
அரபாவில்: காலை, மதிய உணவு மற்றும் தேனீர் குடிநீர் வழங்கப்படும்.
கட்டணம்:
பஸ் மற்றும் ரயிலில் செல்பவர்களுக்கு:
By Buses
5000
4800
4400
4150
3600
3100
2500
By Train
5250
5050
4650
4400
3850
3350
2750
புனிதத்தளங்களில் பயன்படுத்தப்படும் அதிகப்படியான வாகன ஏற்பாடுகள் கட்ணங்களுக்குட்பட்டவை.
தங்களின் பயண விபரங்கள் பற்றி மேலும் அறிய 19998 என்ற தொலைபேசி எண்ணுக்கு அழைக்கவும்.
தங்களின் புனிதப் பயணத்தை இறைவன் பொருந்திக் கொண்டு ஈருலகிலும் நிறைவான நற்கூலிகள் வழங்க வல்ல ரஹ்மான் போதுமானவன்.
பிரார்த்தனைகளுடன்.
எம். ஹூஸைன்கனி, ரியாத்.

Hussain Ghani
President
TMMK,
Central Region,
Riyadh – Saudi Arabia.
+966 502929802.
Tags: , , ,

Leave a Reply