க‌ர‌காட்ட‌த்துட‌ன் க‌ளைக‌ட்டிய‌ துபாய் த‌மிழ்ச் ச‌ங்க‌ சித்திரைத் திருவிழா

DSC_0180 (1)ஷார்ஜா : துபாய் த‌மிழ்ச் ச‌ங்க‌ சித்திரைத் திருவிழா 26.04.2013 வெள்ளிக்கிழ‌மை மாலை ஷார்ஜா ர‌யான் ஸ்டார் இண்ட‌ர்னேஷ‌ன‌ல் ஸ்கூலில் வெகு சிற‌ப்புற‌ ந‌டைபெற்ற‌து.
துவ‌க்க‌மாக‌ அமீர‌க‌ தேசிய‌ கீத‌ம், இந்திய‌ தேசிய‌ கீத‌ம் ம‌ற்றும் த‌மிழ்த்தாய் வாழ்த்து பாட‌ப்ப‌ட்ட‌து.
சித்திரைத் திருவிழாவிற்கு துபாய் த‌மிழ்ச் ச‌ங்க‌ த‌லைவி ஜெய‌ந்தி மாலா சுரேஷ் த‌லைமை வகித்தார். துணைத்த‌லைவ‌ர் குத்தால‌ம் ஏ. லியாக்க‌த் அலி முன்னிலை வ‌கித்தார். பொதுச்செய‌லாள‌ர் சி.ஜெக‌ந்நாத‌ன் வ‌ர‌வேற்புரை நிக‌ழ்த்தினார்.
வ‌ர்ண‌வி ம‌ற்றும் ஞான‌ஸ்ரீ ஆகியோர் திருக்குற‌ளை வாசித்து அத‌ன் பொருளை விள‌க்கின‌ர். ம்ருதுலா இன்று ஒரு த‌க‌வ‌ல் வழ‌ங்கினார்.
த‌மிழ‌க‌ எழுத்தாள‌ர் இள‌ம்பிறை எம்.ஏ. ர‌ஹ்மான் எழுதிய காந்தி போத‌னை, இள‌மைப் ப‌ருவ‌த்திலே,ம‌ர‌பு, சிறுகை நீட்டி உள்ளிட்ட‌ வாழ்க்கை வ‌ர‌லாற்று நூல்க‌ள் ம‌ற்றும் சிறுக‌தை நூல்க‌ள் வெளியிட‌ப்ப‌ட்ட‌ன‌. முத‌ல் பிர‌தியினை துபாய் த‌மிழ்ச் ச‌ங்க நிர்வாக‌க்குழு உறுப்பின‌ர் பால‌கிருஷ்ண‌ன் பெற்றுக் கொண்டார். அத‌னைத் தொட‌ர்ந்து ஜெய‌ந்தி மாலா சுரேஷ், குத்தால‌ம் ஏ. லியாக்க‌த் அலி, ஏ. முஹ‌ம்ம‌து தாஹா உள்ளிட்டோர் பெற்றுக் கொண்ட‌ன‌ர்.
துபாய் த‌மிழ்ச் ச‌ங்க‌த்தின் சார்பில் இள‌ம்பிறை எம்.ஏ. ர‌ஹ்மான் ம‌ற்றும் பெட்டினா ஜேம்ஸின் பெற்றோர்க‌ள் பொன்னாடை ம‌ற்றும் நினைவுப் ப‌ரிசு வ‌ழ‌ங்கி கௌர‌விக்க‌ப்ப‌ட்ட‌ன‌ர்.
ஏற்புரை நிக‌ழ்த்திய‌ எழுத்தாள‌ர் இள‌ம்பிறை எம்.ஏ. ர‌ஹ்மான் அவ‌ர்க‌ள் துபாய் த‌மிழ்ச் ச‌ங்க‌ம் மேற்கொண்டு வ‌ரும் க‌லை ம‌ற்றும் க‌லாச்சார‌ப் ப‌ணிக‌ளுக்கு பாராட்டு தெரிவித்தார். மேலும் த‌மிழ்க் குழ‌ந்தைக‌ள் அனைவ‌ரும் த‌மிழ் மொழியினை க‌ற்ப‌தில் பெற்றோர்க‌ள் உத‌விபுரிய‌  வேண்டும் என்றார்.
கிராமிய‌ ம‌ண‌ம் க‌வ‌ரும் த‌ஞ்சாவூர் ம‌ண்ணெடுத்து உள்ளிட்ட‌ ப‌ல்வேறு பாட‌ல்க‌ளை கோவிந்தராஜ் ம‌ற்றும் குழுவினர், ச‌ந்திரா கீதாகிருஷ்ண‌ன், க‌விதா பிர‌ச‌ன்னா ம‌ற்றும் ரேணுகா ஆகிய‌ ஆசிரியைக‌ளின் குழ‌ந்தைக‌ள் பாட‌ல்க‌ளையும், ந‌ட‌ன‌த்தையும் வ‌ழ‌ங்கின‌ர்.  ஆகாஷ் அருள் கீ போர்டு வாசித்து அனைவ‌ர‌து பாராட்டையும் பெற்றார்.
நிக‌ழ்வினை முஹ‌ம்ம‌து தாஹா ம‌ற்றும் பெட்டினா ஜேம்ஸ் ஆகியோர் தொகுத்து வ‌ழ‌ங்கின‌ர். நிக‌ழ்விற்கான‌ ஏற்பாடுக‌ளை க‌மிட்டி உறுப்பின‌ர்க‌ள் செய்திருந்த‌ன‌ர்.
Tags: , , ,

Leave a Reply