குறும்பாக்கள்

குறும்பாக்கள்
=====================================ருத்ரா
பசி
சோறு இன்னும் கிடைக்கவில்லை
பசி பற்றிய கவிதைக்கு.
நோபல் பரிசு தான் கிடைத்தது.
________________________________________
காதல்
நட்சத்திர மண்டலங்களோடு அவளையும்
“ஸெல்ஃபி” எடுத்துக்கொண்டான்.
இந்த “செமஸ்டருக்கு” இது போதும்!
_________________________________________
பொருளாதாரம்
சோழி குலுக்கி
கணக்கு போட்டுக்கொண்டிருக்கிறார்கள்
எத்தனை சதவீத வளர்ச்சி என்று!
___________________________________________
பரோல்
எழுபது ஆண்டுகளாய் சிறையில்.
பரோல் கூட கிடைக்கவில்லை
நம் “ஜனநாயகத்துக்கு”
____________________________________________
டெங்கு
சட்டசபையில் இதற்கு
பெயர் மாற்றப்பட்டது
“தீயசக்தி” என்று.
Tags: 

Leave a Reply