குரூப்-4 தேர்வு பயிற்சி: நவ.5-இல் சேர்க்கை துவக்கம்

ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் இம்மாதம் 5 ஆம் தேதி முதல் குரூப்-4 தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புக்கான சேர்க்கை நடைபெற இருப்பதாக ஆட்சியர் க.நந்தகுமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

செய்திக்குறிப்பு:ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய குரூப்-4 தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் ஏற்கெனவே நடத்தப்பட்டன. இதில் 13 பேர் இளநிலை உதவியாளர்களாகவும், தட்டச்சர்களாகவும் பணி நியமனம் பெற்றுள்ளனர். மேலும் குரூப்-2 தேர்வுக்கான பயிற்சியில்

120 பேர் பங்கேற்றதில் 16 பேர் முதன்மை தேர்வுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இப்பயிற்சிகளின் தொடர்ச்சியாக, தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் 21.12.2014 அன்று நடத்தவுள்ள குரூப்-4 தேர்வுக்கும் இலவச பயிற்சி வகுப்புகள் நடைபெறுகின்றன. இம்மாதம் 5 ஆம் தேதி முதல் புதிதாக மாணவ,மாணவியர்கள் சேர்க்கை நடைபெறவுள்ளது.

இதில் சேர விரும்பும் மாணவ,மாணவியர் தங்களது பாஸ்போர்ட் அளவு புகைப்படத்துடன் பயிற்சி நடைபெறும் ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கிற்கு சென்று ஒருங்கிணைப்பாளரை தொடர்பு கொள்ளலாம். பயிற்சிக்கு கட்டணம் கிடையாது.

தரமான பயிற்சியாளர்களைக் கொண்டு பயிற்சியளிக்கப்படுவதால் இந்த அரிய வாய்ப்பை மாணவர்கள் நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ளுமாறும் மேலும் விவரங்களுக்கு 04567-22160 அல்லது 8608682791 மற்றும் 0443882812 என்ற எண்களில் தொடர்பு கொள்ளுமாறும் அச்செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags: , , , ,

Leave a Reply