குரூப்-2ஏ தேர்வின் உத்தேச விடைகள் வெளியீடு

தமிழகம் முழுவதும் கடந்த 6-ம் தேதி தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப்-2ஏ தேர்வுக்கான உத்தேச விடைகள் நேற்று தேர்வாணையத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டன.

தமிழக அரசின் பல்வேறு துறைகளில் காலியாகவுள்ள உதவியாளர், தலைமைச் செயலகம் மற்றும் டிஎன்பிஎஸ்சி-யில் நேர்முக எழுத்தர் உள்ளிட்ட பதவிகளில் 1,953 இடங்களை நிரப்புவதற்காக கடந்த 6-ம் தேதி குரூப்-2ஏ தேர்வு நடத்தப்பட்டது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நடத்திய இந்தத் தேர்வில், தமிழகம் முழுவதும் சுமார் 5 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பட்டதாரிகள் பங்கேற்று தேர்வெழுதினர்.

இந்த நிலையில், தேர்வுக்கான உத்தேச விடைகள் (கீ ஆன்சர்) வெளியிடப்பட்டுள்ளன. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நேற்று தனது இணையதளத்தில் (www.tnpsc.gov.in) இந்த உத்தேச விடைகளை வெளியிட்டது.

இந்த உத்தேச விடைகளில் ஏதேனும் சந்தேகம் இருந்தால் அதுதொடர்பான விவரங்களை உரிய ஆவணங்களுடன் வருகிற 16-ம் தேதிக்குள் தேர்வாணையத்துக்கு அனுப்பி வைக்கலாம் என்றும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்து ள்ளது

Tags: , , ,

Leave a Reply