குப்பையில் இருந்து இயற்கை உரம் அபிராமம் பேரூராட்சி முன்னோடி

அபிராமம் : இயற்கை உரம் தயாரிப்பில் அபிராமம் பேரூராட்சி முன்னோடியாக திகழ்கிறது.அதிகமான விவசாய பகுதிகளை உள்ளடக்கிய அபிராமம் பேரூராட்சியில், இயற்கை உரங்களின் தேவை அதிகமாக இருப்பதால், இப்பகுதிகளில் சேகரிக்கப்படும் காய்கறி மற்றும் டீத்தூள் கழிவுகள் போன்ற மக்கும் குப்பைகளை கொண்டு இயற்கை உரம் தயாரிக்கப் படுகிறது. இதற்கான பணியில் தினமும் 6 பணியாளர்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர்.

இதுகுறித்து பேரூராட்சி தலைவர் குமணன் கூறுகையில், “”இப்பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில்,தினமும் சேகரிக்கப்படும் 2 டன் காய்கறி கழிவுகள் போன்ற (சாத்துக்குடி, எலுமிச்சை, ஆரஞ்ச் தவிர்த்து) எளிதில் மக்கும் குப்பைகளை 3 அடி அகலம், 4 அடி உயரம் கொண்ட குழிகளுக்குள் கொட்டி, 7 நாட்களுக்கு ஒரு முறை கால்நடை சாணத்தால் பதப்படுத்தி “பயோ கம்போஸ்டர்’ உரங்களை’ தெளித்து, 45 நாட்கள் கழித்து மண் இல்லாத இயற்கை உரங்கள் தயாரிக்கப்படுகிறது. இவை ஒரு பாக்கெட் 5 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இந்த உரங்களை விவசாயிகள் ஆர்வமுடன் வாங்கி பருத்தி, மிளகாய், நெல் விவசாயத்திற்கு பயன்படுத்தி வருகின்றனர். அவர்களின் தேவைக்பேற்ப வழங்க இயலாததால், உற்பத்தியை அதிகரிக்க கூடுதலாக பணியாளர்கள் நியமிக்கப்படவுள்ளனர். இதேபோன்று மண்புழு உரமும் தயாரிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, அடுத்த மாதத்திலிருந்து தயாரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது,”என்றார்.

Tags: , , , ,

Leave a Reply