குடிநீரில் நச்சுத்தன்மை பரவியதால் சிறுநீரகத்தை இழக்கும் மக்கள்

குடிநீரில் நச்சுத்தன்மை பரவியதால் சிறுநீரகத்தை இழக்கும் மக்கள்

  தேவதானப்பட்டி அருகே உள்ள தே.வாடிப்பட்டியில் உள்ள பொதுமக்களுக்கு ஊராட்சி சார்பில் ஆழ்துளைக் கிணறு அமைத்து அதன் மூலம் குடிநீர் வழங்கப்படுகிறது. இதன்மூலம் இப்பகுதி மக்கள் ஊராட்சியில் வரும் தண்ணீரைப் பிடித்து குடிநீருக்குப் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் தே.வாடிப்பட்டி ஊராட்சிக்குற்பட்ட பகுதியில் வசிப்பவர்களுக்கு கல்அடைப்பு, சிறுநீரகக் கோளாறு முதலான நோவுகள் அடிக்கடி ஏற்பட்டு அதற்கான மருத்துவமும் பார்த்து வருகின்றனர்.
  இந்நிலையில் தே.வாடிப்பட்டி ஊராட்சியில் ஏறத்தாழ 10க்கும் மேற்பட்டவர்களுக்குச் சிறுநீரகக்கோளாறு ஏற்பட்டு மதுரையில் உள்ள அரசு, தனியார் மருத்துவமனைகளுக்கு அனுப்பபட்டனர். அங்கே உள்ள மருத்துவர்கள் குடிநீரில் அமிலத்தன்மை, காரத்தன்மை வேறுபாடு உள்ளது என்றும் அந்தத்   தண்ணீரை ஆய்வு செய்து அக்கிணற்றை மூடவேண்டும் எனவும் வலியுறுத்தினர். இதன் தொடர்பாகத் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் தண்ணீரை ஆய்வு செய்து குடிப்பதற்கு உகந்ததல்ல எனக் கண்டறிந்துள்ளனர்.
  எனவே மாவட்ட நிருவாகம் தே.வாடிப்பட்டி ஊராட்சிக்குக் கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்து புதிய ஆழ்துளைக்கிணறு அமைக்கவும் குடிப்பதற்கு தகுதியற்ற நீர் எந்தக்கிணற்றிலிருந்து வருகிறது என ஆய்வு மேற்கொண்டு அக்கிணற்றை மூடவேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
பெயர்-வைகை அனீசு :peyar_vaigaianeesu_aniz_name

Leave a Reply