காலி பணியிடங்கள் குறித்து ஆன்லைனில் அறியலாம்

அரசு மற்றும் சார்பு நிறுவனங்களின் பணியிடங்களை, வேலைவாய்ப்பு அலுவலக ஆன்லைன் மூலம் தெரிந்துகொள்ளலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது.

மாவட்ட நிர்வாக அறிக்கை:
அரசு மற்றும் அரசு சார்பு நிறுவனங்கள் தற்காலத்தில் பல்வேறு விதமான பணியிடங்களை அறிவித்து வருகின்றன. வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையானது வேலை தேடும் இளைஞர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, தனது இணையதள முகவரிwww.tnvelaivaaippu.gov.in மூலம், அரசு மற்றும் அரசு சார்பு நிறுவனங்கள் அறிவிக்கும் பணியிடங்களை வாரந்தோறும் முழுமைப்படுத்தி வெளியிட்டு வருகின்றது. இதனால், வேலை தேடும் இளைஞர்கள் அரசு மற்றும் அரசு சார்பு நிறுவனங்கள் அறிவிக்கும் பணியிடங்கள் அதற்கான கல்வித்தகுதி மற்றும் வயது வரம்பு போன்ற விபரங்களை எளிதாக அறிந்து கொள்வதுடன், தகுதியும், விருப்பமும் உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
எனவே, வேலை தேடும் இளைஞர்கள் அரசு மற்றும் அரசு சார்பு நிறுவனங்கள் அளிக்கும் பணியிடங்கள் தொடர்பான விவரங்களை www.tnvelaivaaippu.gov.in என்ற இணையதள முகவரியில் பார்வையிட்டு அறிந்து கொள்ளலாம். இவ்வாறு, அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Tags: , ,

Leave a Reply