காதல் கணக்குகள்

காதல் கணக்குகள்
==================================================ருத்ரா
குழந்தைகள் உருவில்
இறக்கைகளுடன்
காதலின் தேவதைகள்
வானத்தில்
என் தலைக்கு மேல்
பறந்து கொண்டிருந்தன.
“உங்களுக்கு
என் புத்தாண்டு வாழ்த்துக்கள்.
இந்த ஆண்டாவது
எனக்கு ஒரு காதலி
கிடைப்பாளா?”
நான் சொன்னேன்.
அவை கூறின.
“நீ காதலிக்க வேண்டாமா
காதலிக்க வேண்டுமா
என்று நினைத்தது
35899
காதலிக்க நினைத்தது
65998
காதலிக்க முனைந்தது
76999
காதலித்தது
0000000
அடுத்த ஆண்டு பார்க்கலாம்”
“அது சரி
இதையெல்லாம்
எப்படி கணக்கு எடுக்கிறீர்கள்?”
“அது தான்
ஃபெப்ரருவரிமாதத்தில்
வேலன்டைனில்
நிறைய நிறைய‌
ரெக்கைகள் குவியுமே”
அப்படி சிரமப்பட்டு
கணக்கு எடுப்பதில்
உங்கள் ரெக்கைகள் எல்லாம்
குவிந்து விடுமா
என்ன?
“ரெக்கைகள் என்று சொன்னது
“ஓ ஈசல்களே”
உங்கள் சிறகுகளை!”
Tags: ,

Leave a Reply