காதலர் தினச் சிறப்புக் கவிதை

சித்திரம்போ லுன்றன் சிரித்த முகவெழில்

முத்திரையாய்ப் பதிந்து முழுவது முள்வாங்கி

நித்திரையைக் குலைத்தென்னை நித்தம் நினைவினிற்

பித்தனாக்கி யுள்ளத்தைப் பிழிகின்றா யுன்னெழிற்

கன்னத்தின் செழிப்பில் கவிழ்ந்தேனே யதன்குழியில்

இன்னமு முள்ள மிரும்பாகிப் போகாமற்

கடைக்கண் திறக்காதோ காதலி உன்றன்

மடைத்தாள் திறக்காதோ மனம்

-அதிரை கவியன்பன் கலாம், அபுதாபி

Leave a Reply