காஞ்சிரங்குடி பக்கீர் அப்பா தர்கா பகுதி சுற்றுலா தலமாக அறிவிக்க வலியுறுத்தல்

கீழக்கரை: காஞ்சிரங்குடி பக்கீர் அப்பா வலியுல்லா தர்காவை, சுற்றுலா தலமாக அறிவித்து அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க அரசு முன்வர வேண்டும் என, அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர். திருப்புல்லாணி ஒன்றியம் காஞ்சிரங்குடியில் மகான் பக்கீர் அப்பா வலியுல்லா தர்ஹா உள்ளது. இந்த பகுதியை சுற்றுலா தலமாக்கி, அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டி பல ஆண்டுகளாக இப்பகுதி மக்கள் கோரி வருகின்றனர்.இமாம் முகம்மது : கேரளா, ஆந்திரா உட்பட பல வெளிமாநிலங்களில் இருந்து அனைத்து மதத்தினரும் வந்து செல்லும் சமூக நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக தர்கா விளங்குகிறது.

கடற்கரை ஓரங்களில் மணல் மற்றும் கருவேல மரங்கள், முட்செடிகள் ஆக்கிரமித்துள்ளதால் சுற்றுலா பயணிகள் கடல் அலைகளை ரசிக்க முடியாத நிலை உள்ளது. மேலும், நிழற்குடைகள், சிறுவர், சிறுமியர்களுக்கான பொழுதுபோக்கு
அம்சங்களுடன் விளையாடுவதற்குரிய வசதிகள் செய்து தர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார். காஞ்சிரங்குடி ஊராட்சி தலைவர் காளிமுத்து ஆதித்தன்: சுற்றுலா தலமாக ஆக்க வேண்டும் என, இப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வருகிறது. இதுகுறித்து, அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வேன், என்றார்.

Tags: , , ,

Leave a Reply