கவிதை

மருத்துவமனையில் உள்ள

அளவுகோலில் அளக்கமுடியும்

உயிர்பிரியும் வலியை

 

உயிர் பிறக்கும் வலியை

வரையறுக்கவே முடியாது-ஆம்

 

வரையறுக்கவே முடியாத

பல மடங்கு வலியை அனுபவித்து

என்னை பெற்றதால்தான்

ஒவ்வொரு முறை வலிக்கும்போதும்

உன்னையே அழைக்கிறேனோ

அம்மா என்று??

 

விவரம் தெரியாதவரை நான்

நினைத்ததுண்டு அம்மா

என்பவள் அன்பின் உருவம் என்று

விவரம் தெரிந்த உடன்

உணர்ந்தேன் அம்மா என்பவள்

வலியின் உருவம் என்று!!!

 

அனைத்து அம்மாக்களுக்கும்

என்னுடைய ஒவ்வொரு

வலியின் கண்ணீரால் சமர்ப்பணம்

Leave a Reply