கவிதை : விஞ்ஞானம்

விஞ்ஞானம்

ஸ்மார்டாய் இக்காலத்தில் வாழ்ந்திட
ஸ்மார்ட் போனை ஸ்மார்ட்டாய் பயன்டுத்திடு

தொலைதூர நண்பனிடம் விஷயங்ளை பகிர்ந்திடு
அருகிலுள்ள உறவின் உணர்வையும் மதித்திடு

செல்போனில் பேச்சினை குறைத்திடு
ரேடியேஷனை விட்டு விலகி இருந்திடு

கூகுலின் துணையோடு
பிள்ளைக்கு படிப்பில் ஆர்வத்தை கூட்டிடு

வாட்ஸ்அப்பில் ஜோக்ஸினை பகிர்ந்திடு
அனைவர் முகத்தில் சிரிப்பு மலர்ந்திட உதவிடு

சமையல் அறை கத்திப்போல இதனை பயன்படுத்திடு
உன்னைப் பாதிக்காதபடி பார்த்திரு

நேரத்தின் மதிப்பை உணர்ந்திடு
இதில் குறைந்த நேரத்தை செலவிடு

விஞ்ஞான வளர்ச்சியில் பலன்கள் பல கண்டிடு
அது நம்மை விஞ்சாதபடி வாழ்ந்திடு.

அன்புடன்
ஸ்ரீவிபா.

Tags: ,

Leave a Reply