கருத்தரங்கம்

சென்னை பல்கலைக்கழகம்: செப்.4-இல் “திரைப்படங்களும், தமிழ் இலக்கியமும்’ கருத்தரங்கம்

 

“திரைப்படங்களும், தமிழ் இலக்கியமும்’ என்ற தலைப்பிலான கருத்தரங்கம் திருவள்ளுவர் சிலை எதிரில் உள்ள சென்னைப் பல்கலைக்கழக தமிழ்த் துறை அரங்கில் (மெரீனா வளாகம்) வெள்ளிக்கிழமை (செப்.4) காலை 10 மணிக்கு நடைபெறவுள்ளது.
சென்னைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறை சார்பில் நடைபெறவுள்ள இந்தக் கருத்தரங்கில் எழுத்தாளரும் திரைக்கதை-உரையாடலுக்கான குடியரசுத் தலைவர் விருதை 4 முறை பெற்றவருமான தேவபாரதி, நடிகர்கள் சாருஹாசன், சிவகுமார், சத்யராஜ், இளவரசன், நடிகை லட்சுமி, இயக்குநர் பி.லெனின், தயாரிப்பாளர் சங்கிலி முருகன், ஆவணப்பட தயாரிப்பாளர் சா.கந்தசாமி, எழுத்தாளர் திருப்பத்தூர் பி.ச.குப்புசாமி, அடையாறு பேட்ரீஷியன் கல்லூரி தமிழ்த் துறைத் தலைவர் அகிலா சிவசங்கர், தமிழ்நாடு மாநில கல்விக் கருவூலத்தைச் சேர்ந்த வி.ஆனந்தமூர்த்தி உள்ளிட்டோர் கலந்துகொள்கின்றனர்.

Tags: 

Leave a Reply