கம்பத்தில் அரசுப்பணி போட்டித்தேர்வுகளுக்கான வாவேர்பள்ளிவாசல் பயிற்சிமையம் துவக்கம்

NEWS IMAGE*கம்பத்தில் அரசுப்பணி  போட்டித்தேர்வுகளுக்கான
வாவேர்பள்ளிவாசல் பயிற்சிமையம் துவக்கம்*
கம்பம் வாவேர் பள்ளிவாசல் மாத் சார்பாக வாவேர் பள்ளிவாசல் பயிற்சி மைய துவக்கவிழா10.01.2018 அன்று மாலை  5.30 மணியளவில்  கம்பம் சுங்கம் தெருவிலுள்ள மதரசா வளாகத்தில்நடைபெற்றதுஇதில் நகரின் முக்கிய பிரமுகர்கள்சமுதாய பெரியோர்கள்ஜமாத் உறுப்பினர்கள்ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.  கம்பம் வாவேர் பள்ளிவாசல் மாத் தலைவர் ஜனாப் ஹாஜி பாபா முஹம்மது பக்ருதீன் அவர்கள் தலைமை வகித்தார்.  செயலாளர் ஹாஜி ஜனாப் ஜெய்னுலாபிதீன் அவர்கள் வரவேற்ப்புரை வழங்கினார். முன்னாள்  ஜமாத் தலைவர் ஹாஜி ஜனாப் கே.எம். அப்பாஸ் அவர்கள்  சிறப்புரை   நிகழ்த்தினார்.  அப்போது கல்வியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.  இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் மாவட்ட செயலாளர் ஹாஜி ஜனாப் சாகுல் ஹமீது அவர்கள் வாழ்த்துரை வழங்கினார்.  தனது உரையில் எடுக்கப்பட்டிருப்பது சிறந்த முயற்சி எனவும்  இன்றைய சூழ்நிலையில் ,இத்தகைய பயிற்சி மையங்கள்  கட்டாயம் தேவை என்றும் கூறினார் தலைமை இமாம் ஹாஜி அலாவுதீன் அவர்கள் மற்றும் கம்பம் ஏ.வி.ஐ. மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் ஜனாப் சையது அபுதாஹிர் அவர்கள் ஆகியோர் வாழ்த்துரை நிகழ்த்தினர். பயிற்சி மையத்தின் ஒருங்கிணைப்பாளரும் வாவேர் பள்ளிவாசல் ஜமாத் கமிட்டி இணைச் செயலளருமான ஜனாப் எம். காஜா மைதீன் அவர்கள் நன்றியுரை வழங்கினார்.
                                                     
Tags: , , , , ,

Leave a Reply