கத்தார் தமிழர் சங்கத்தின் குழந்தைகள் தின நிகழ்ச்சி

QTS Children's Day Eventகத்தார் தமிழர் சங்கத்தின் குழந்தைகள் தின நிகழ்ச்சி

 

தோகா ( கத்தார் ) : இந்திய கலாச்சார மையத்தின் உறுப்பு அமைப்பான கத்தார் தமிழர் சங்கம் அண்மையில்  குழந்தைகள் தின நிகழ்ச்சியை ,இந்திய கலாச்சார மையத்தின் மும்பை அரங்கில் ஏற்பாடு  செய்திருந்தது.

 

முன்னாள் இந்தியப் பிரதமர் ஜவஹர்லால் நேரு அவர்களின் பிறந்த நாளான நவம்பர் 14 ஆம் நாளை குழந்தைகள் தினமாக இந்தியா  அனுசரித்து வருகிறது.இதையொட்டி குழந்தைகளுக்காக நடைபெற்ற இந்நிகழ்வில்,மகாகவி பாரதியாரின் பெருமைகளை விளக்கும்  வகையில் கனவு மெய்ப்பட வேண்டும்  என்ற நாடகமும் ,குழந்தைகளுக்கான பல்வேறு விளையாட்டுகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.பங்கேற்பாளர்களுக்கு  பரிசுகள் வழங்கப்பட்டன.

 

அனைவருக்கும் இரவு சிற்றுண்டி ஏற்பாடும் செய்யப்படிருந்தது.டெய்சீர் மோட்டார்ஸின் வியாபார அபிவிருத்தி மேலாளர் ஆனந்த் அவர்கள்  சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.சங்கத்தின் நிர்வாகக்குழு உறுப்பினர்கள்,உறுப்பினர்கள்,குழந்தைகள்,பெற்றோர்கள் என சுமார் 80 பார்வையாளர்கள் கண்டு களித்த  இந்நிகழ்ச்சியை மகளிர் குழு உறுப்பினர்கள் வித்யா ஆனந்த்  மற்றும் மாலா கார்த்திக் ஆகியோர் நிகழ்ச்சியை நடத்தினர்.

 

 

Tags: , ,

Leave a Reply