கத்தார் ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் சார்பில் இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி

IMG-20140725-WA0014கத்தார் ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் சார்பில் இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி

 

தோஹா ( கத்தார் ) : கத்தார் ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் சார்பில் இஃப்தார் எனும் நோன்பு திறப்பு நிகழ்ச்சி 25.07.2014 வெள்ளிக்கிழமை மாலை முதுவை இல்லத்தில் நடைபெற்றது.

நோன்பு திறப்பு நிகழ்ச்சிக்கு கத்தார் ஜமாஅத் ஒருங்கிணைப்பாளர் சிக்கந்தர் ஹுசைன் தலைமை வகித்தார்.

நூருல் அமீன் வரவேற்புரை நிகழ்த்தினார்.  மௌலவி சீனி நைனார் முஹம்மது ஜமாஅத்தின் சார்பில் சமுதாயப் பணி ஆற்ற வேண்டியதன் அவசியம் குறித்து வலியுறுத்தினார்.

நிகழ்வில் ஃபக்ருதீன் ஷேக் முஹைதீன், ஃபக்ருதீன் அலி அஹமது, சையது அப்துல் ரஹ்மான்,  முஹம்மது உமர் ஷரீஃப்,  முஹம்மது நிஜாம், ஷேக் பாஷ்,  கௌஸ் பாஷா,  ஹாமித் பாஷித், ராஜா, உமர், ஹர்கத், மாஸ்டர் ஃபைஷ் உள்ளிட்டோர் பங்கேற்றுச் சிறப்பித்தனர்.

IMG-20140725-WA0044

Tags: , , , ,

Leave a Reply