கத்தாரில் வஹியாய் வந்த வசந்தம் நூல் வெளியீடு

தோஹா : கத்தார் நாட்டின் தலைநகர் தோஹாவில் ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் கத்தார் கிளை சார்பில் வஹியாய் வந்த வசந்தம் எனும் கவிதை நூல் வெளியீட்டு நிகழ்ச்சி 26.11.2012 செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது.

ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் கத்தார் கிளை தலைவர் ஏ. ஃபக்ருதீன் அலி அஹமது தலைமை வகித்தார். செயலாளர் சிக்கந்தர் ஹுசைன் வரவேற்புரை நிகழ்த்தினார்.

துணைத்தலைவர் அஜ்மல் ’வஹியாய் வந்த வசந்தம்’ நூலை அறிமுகப்படுத்தி வெளியிட முதல் பிரதியினை எஸ்.என். ஃபக்ருதீன் பெற்றுக்கொண்டார். கவிஞர் ஹிதாயத்துல்லா எழுதிய இந்நூல் மஹான் சதக்கத்துல்லா அப்பா சிறப்புப் பரிசினை பெற்றுள்ளது. இருபது வருடங்களுக்குப் பின்னர் இந்நூல் காஹிலா பதிப்பகத்தால் மறுபதிப்பு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

நிகழ்வில் செயற்குழு உறுப்பினர்கள் அனஸ், ரஹ்மத்துல்லா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Tags: , ,

Leave a Reply