கணியம் மின்னிதழ் – இதழ் 7

‘கணியம்’ இதழ் மூலம் உங்களை மீண்டும் சந்திப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம். இம்மாத வெளியீடு – http://www.kaniyam.com/release-07/

கணியம், இப்போது உபுண்டு பயனர் அனைவரையும் எளிதில் சென்றடையும் வகையில் Ubuntu Software Center -ல் சேர்க்கப்பட்டுள்ளது. இது, கணியம் குழுவினரின் தொடர்ந்த, மாபெரும் உழைப்பிற்கு கிடைக்கும் பரிசே ஆகும்.

கணியம் இதழ் வெளியீடை தொடர்ந்து நடத்தி வரும் எழுத்தாளர்களுக்கும் உற்சாகப்படுத்தி வரும் வாசகர்கள் அனைவருக்கும் நன்றிகள்.

கணியம் இதழின் படைப்புகள் அனைத்தும் கிரியேடிவ் காமன்ஸ் என்ற உரிமையில் வெளியிடப்படுகின்றன. இதன் மூலம், நீங்கள் யாருடனும் பகிர்ந்து கொள்ளலாம், திருத்தி எழுதி வெளியிடலாம், வணிக ரீதியிலும் பயன்படுத்தலாம்.

ஆனால், மூலக்கட்டுரை, ஆசிரியர் மற்றும் www.kaniyam.com பற்றிய விவரங்களை சேர்த்துத் தர வேண்டும். இதே உரிமைகளை யாவருக்கும் தர வேண்டும். கிரியேடிவ் காமன்ஸ் என்ற உரிமையில் வெளியிட வேண்டும்.

உபுண்டு 12.04 வெளியீட்டுக் கொண்டாட்டம், சென்னையில் நடைபெறுகிறது. அனைவரும் வருக. விவரங்கள் உள்ளே.

‘கணியம்’ தொடர்ந்து வளர, கட்டுரைகள், படங்கள், ஓவியங்கள், புத்தக அறிமுகம், துணுக்குகள், நகைச்சுவைகள் என உங்களது படைப்புகளையும்editor@kaniyam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு  அனுப்பலாம்.

பொருளடக்கம்

 • Getting Started with Ubuntu 12.04
 • காணொளிகளைப் பதிவிறக்கம் செய்ய, கோப்பு வடிவம்  மாற்ற –  Clipgrab
 • உபுண்டு 12.04-ல் apt-fast மென்பொருள் தரவிறக்கியினை நிறுவுதல்
 • awk-ஐ பயன்படுத்த ஆரம்பிப்பது எப்படி?
 • வர்த்தக உலகில் இலவச மென்பொருட்கள்
 • உபுண்டு 12.04 வெளியீட்டுக் கொண்டாட்டம்
 • உபுண்டுவை மாக்(Mac ) OS X Lion போன்று மாற்றுவது எப்படி?
 • உபுண்டுவில் வலையமைப்பின் அலைத்தொகுப்பை செயல் வாரியாகக் கண்காணிக்க ‘NetHogs’
 • pySioGame-உடன் சிறுவர்களுக்கான கல்வி சார்ந்த செயலிகளும் விளையாட்டுகளும் – உபுண்டு 11.10/12.04
 • உபுண்டு 12.04 மற்றும் விண்டோஸ் 7-ழுடன் இரட்டைத் துவக்கம் (Dual Boot)
 • பைதான் – ஒரு அறிமுகம்
 • ஶ் – அறிமுகம்
 • ஃபெடோரா விஞ்ஞானம்- அமித் சாஹா அவர்களுடன் ஒரு நேர்காணல்
 • லினக்ஸ் இயக்குதளங்களில் இந்திய ரூபாய்!
 • கட்டற்ற கணிநுட்ப ஆய்வுக் கட்டுரை போட்டி
 • துறை சார் – இடம் சார் பொறுப்பாளர்கள்
 • கணியம் வெளியீட்டு விவரம்
 • கணியம் பற்றி


நன்றிகளுடன்
கணியம் குழு
http://www.kaniyam.com/

Tags: , ,

Leave a Reply