கணவன் மனைவி

கணவன் மனைவி
  ********************

கதிரவன் உதித்தான் காலையில்
நானும் விழித்தேன்  பதட்டத்தில்

             வேலை வேகமாக நடந்தது சமையலறையில்
பள்ளிவண்டி வந்திடுமே என்ற கவலையில்

             அதனால் உதவி என்று நாடினேன் என்னவரை
அவரும் செய்வதாக சொன்னார் முடிந்தவரை

             செய்யாததால் …
எனை மீறி வந்த கோபத்தை காட்டினேன் அவரிடம்
எதுவும் பேசாமல் சென்றார் என்னிடம்

எப்பொழுதும் போல
டாடா, பைபை இல்லை அன்று…
பள்ளிக்குழந்தையைப் போல் சென்றார்…
விடைபெற்று…

            அவர் சென்றதுமே
எனைவிட்டுச் சென்றது கோபம்
உடனே வராதா…
அழைப்பு அவரிடமிருந்து…என்ற ஏக்கம்

           அழைப்பும் வந்தது…
அனைத்தையும் மறந்தவளாய் கேட்டேன்
எப்பொழுது திரும்புவீர்கள் என்று…

           அடடா! எத்தனை அழகானது ….
கணவன் மனைவி எனும் இந்த உறவு!

           அன்புடன்
ஸ்ரீவிபா.

Tags: ,

Leave a Reply