ஓ..முஹர்ரமே….

ஓ..முஹர்ரமே….உன்னையும் என்னையும் படைத்த இறைவனிடம் கண்ணீரோடு மன்றாடுகிறேன்!
                                  (கீழை ஜஹாங்கீர் அரூஸி)
ஓ…முஹர்ரமே…ஹிஜ்ரி 61-ல் உன் முகத்தில் மனித ரத்தத்தை பூசிக்கொண்ட நீ ஹிஜ்ரி 1437 ஆகியும் இன்று வரை அந்த ரத்த துளிகளை அழிக்காதது ஏன்?
ஓ…முஹர்ரமே….உனது பத்தாவது நாளில் எங்களின் மாணிக்கம் நபிகள் நாயகம்(ஸல்)அவர்களின் தோளில் விளையாடிய பேரனார் இமாம் ஹுசைன்(ரலி)அவர்கள் யஜீதால் கொல்லப்பட்ட தனது 6 மாத குழந்தையின் ரத்த துளிகளை வானில் தெளித்ததாலா…
இன்றும் அந்த கூபாவிலும் பாக்தாதிலும் மனித ரத்தத்தை குடித்து கொண்டிருக்கிறாய்?
ஓ…முஹர்ரமே…பெருமானாரின் பேரப்பிள்ளை இமாம் ஹுசைன்(ரலி)அவர்களின் தலையை வெட்டி கையில் ஏந்தி ஊர்வலம் நடத்திய யஜீதின் படையை இன்னுமா நீ பார்த்து வருகிறாய்?
அதனால் தான் இன்றும் கூட கூபாவின் வீதிகளில் மனித தலையை வெட்டி கையில் ஏந்தி ஊர்வலம் செல்கிறதோ இன்றைய யூத யஜீதின் படைகள்?
ஓ…முஹர்ரமே….யஜீது படையால் பெருமானாரின் குடும்ப ரத்தம் சிந்திய சிரியாவிலும் ஈராக்கிலும் இன்றும் ரத்த ஆறுகள் ஓடுவது உனக்கான கோபமென்றால்….
ஒன்றும் அறியா பாலஸ்தீன மண்ணிலும் யூத யஜீதுகள் அப்பாவி மக்களின் ரத்தம் குடிக்க நீ அனுமதிப்பது நியாயமா?
ஓ..முஹர்ரமே….உன்னையும் என்னையும் படைத்த இறைவனிடம் கண்ணீரோடு மன்றாடுகிறேன் யா அல்லாஹ்,பாலஸ்தீனத்து மக்களை நவீன யஜீதுகளிடமிருந்து காப்பாற்று.
ஓ….முஹர்ரமே…உன்னையும் என்னையும் படைத்த இறைவனிடம் கண்ணீரோடு மன்றாடுகிறேன் யா அல்லாஹ்,பாசிஸ யஜீதுகளிடமிருந்து என் இந்திய தேசத்தையும் என் இந்திய மக்களையும் காப்பாற்று.
Tags: ,

Leave a Reply