ஒளிப்பதிவாளர் செழியனுடன் கலந்துரையாடல்

ஒளிப்பதிவாளர் செழியனுடன் கலந்துரையாடல்

01-04-2017, சனிக்கிழமை, மாலை 5.30 மணிக்கு

பியூர் சினிமா புத்தக அங்காடி, எண். 7, மேற்கு சிவன் கோவில் தெரு, வடபழனி, வாசன் ஐ கேர் அருகில், விக்ரம் ஸ்டுடியோ எதிரில்.

தமிழ் சினிமாவின் மிக முக்கிய ஒளிப்பதிவாளரான செழியன் அவர்களுடன் ஏப்ரல் ஒன்றாம் தேதி பியூர் சினிமாவில் கலந்துரையாடல் நடைபெறவுள்ளது. தனக்கு பிடித்த நெருக்கமான கதைகளை மட்டுமே தேர்ந்தெடுத்து ஒளிப்பதிவு செய்யும் செழியன் அவர்கள், விகடனில் எழுதிய உலக சினிமா தொடர் மிகவும் புகழ்பெற்ற ஒன்று. உலக சினிமாவை எல்லா தரப்பு மக்களுக்கும் எளிதில் கொண்டு சென்ற அந்த தொடர் புத்தகமாகவும் வெளிவந்து சிறப்பாக விற்பனையாகிக் கொண்டிருக்கிறது. இலக்கியம், உலக சினிமா என தேர்ந்த வாசிப்புடன் தமிழில் இயங்கும் வெகு சில படைப்பாளிகளில் செழியனும் ஒருவர். கல்லூரி, ரெட்டைச்சுழி, மகிழ்ச்சி, தென்மேற்குப் பருவக்காற்று போன்ற திரைப்படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். இயக்குநர் பாலாவின் “பரதேசி, தாரை தப்பட்டை” மற்றும் இயக்குநர் ராஜுமுருகன் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான “ஜோக்கர்” திரைப்படங்களிலும் செழியனின் ஒளிப்பதிவு பெரும் அளவில் பேசப்பட்டது. ஒளிப்பதிவு நுட்பங்கள், ஒளிப்பதிவாளருக்கு தேவையான வாசிப்பு என செழியனுடன் கலந்துரையாட அவசியம் வாருங்கள். அனுமதி இலவசம்…

Tags: , ,

Leave a Reply