ஒற்றுமை தினம்

–அபிநயா

பரபரப்பான வேளை(லை)யில்
வேறுவேறுதிசைகளில் விரவிக்கிடந்தாலும் இளந்தென்றலுடன் இலக்கியச் சாரலடித்ததால்  இக்கனம் இனிதாய் ஒன்றிணைந்தோமே!

ஒன்றுபட்ட நாட்டினையும்
வென்றுபெற்றிடவே
வேற்றுமைதீயை வேகமாய் பரவச்செய்தார்களே!
தேசியகீதத்தை தேனொழுக பாடுகையில்மட்டும் தேசப்பற்றினை  தெரிக்கவிடாமல் தண்ணீர்பங்கீட்டிலும்
தாயுள்ளம் கொள்ளச்செய்திடுவாயே!

எதிர்மறை எண்ணங்களுடான வேற்றுக்கருத்து தம்பதிகளும்
ஒத்தக்கருத்து கொண்டகாந்தமாய்
ஒட்டிக்கொள்ளும் அதிசயம்செய்வாயே!
மழலைகளுக்குள் நடக்கும் பொம்மைப் பரிமாறல்களும் ஒற்றுமையை ஓங்கிவளர்த்திடுமே!

விளையாட்டுப்போட்டிகளில் மட்டுமல்லாமல் கேடுவிளைவிக்கும்  அடிமட்ட பிரச்சனையிலும்
ஒற்றுமை விதையை விதைத்து வெற்றிக் கூச்சலிடுவோமே!

இரும்புமனிதனை இயற்கைதந்தநாளோ இன்னல்கள்கொடுத்த சீனப்படைகளை சீற்றத்துடன் சண்டையிட்டு சிதறடித்த நாளோ
வேற்றுமைகளில் வெற்றிகள்கானும் ஒற்றுமைத்திருநாள் இத்திருநாளே!

Tags: ,

Leave a Reply