ஒரே மேடையில் மறைந்த சிங்கப்பூர் பிரதமரும் மறைந்த தி.மு.க தலைவர் அண்ணாவும்

சிங்கப்பூரின் முதல் பிரதமர் பல தேசியங்கள் ஒருங்கிணைந்த சிங்கப்பூரில் தமிழர்கள் மீது நட்பும் நம்பிக்கையும் கொண்டிருந்தார்.  1965 ஆம் ஆண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருந்த அண்ணாவும் இரா.செழியனும் 10 நாட்கள் இந்துய மரபு தொடர்பான சுற்றுப்பயனமாக மலேசியா சிங்கப்பூர் வந்தனர்.  அவர்கள் வருகைக்குச் சில நாட்கள் முன்னர் அண்ணா பிரிவினையை வலியுறுத்தும் இயக்கத்தின் செயலாளர் என்பதால் அவர் வருகையைத் தடை செய்யவேண்டும் என்று பிரச்சினையைக் கிளப்பினர்.  சிங்கப்பூரின் பிரதமர் அந்தக் கருத்துக்கு உடன்படவில்லை.  மாறாக சிங்கப்பூர் தி.மு.க ர்ர்ச்பாடு செய்திருந்த அண்ணாவின் வரவேற்புக் கூட்டத்துக்குத் தலைமை தாங்கினார்.  அண்ணாவின் பேச்சு சிங்கப்பூர் தமிழர்கள் புலம் பெயர்ந்தவர்கள் அல்ல அவர்கள் சிங்கை மண்ணின் மைந்தர்கள் என்று பேசியதோடு கூட்டத்தில் திரட்டப்பட்ட நிதியைச் சிங்கப்பூர் பல்கலைக்கழகத்துக்கு அளித்து இந்திய மரபு தொடர்பான நூல்களை வாங்கப்பயன்படுத்திக்கொளுமாறு கொடையாகக் கொடுத்தார்.

சர்க்கரைச்சீமான்
டிஸ்கி: சிங்கப்பூர் பன்முக தேசியம்பற்றிய ஆய்வுக்கு வழிகாட்டியாக இருந்தபோது கிடைத்த தகவல்
Tags: ,

Leave a Reply