ஒரு எளிமையான ஆரோக்கிய உணவு.

jameel foodஒரு எளிமையான ஆரோக்கிய உணவு.

ஒரு கோப்பையில் நாலு தேக்கரண்டி தயிரை மைப் போல் அடித்து அதில் 4 முட்டையை உடைத்து ஊற்றி, ஒரு துளி உப்பு போட்டு நன்கு ஆம்லெட்டுக்கு கலக்குவது போல் தயிருடன் அடித்து கொள்ளுங்கள்.

அடுப்பை பற்ற வைத்து பொறிக்கன் சட்டியில் தேங்காய் எண்ணெய் ஊற்றி காய விடுங்கள். அதில் அரை வெங்காயத்தை நறிக்கி போட்டு பொன்நிறமாக மாறும் வரை வதக்குங்கள். பிறகு தயிருடன் அடித்து வைத்துள்ள முட்டை ஊற்றி பொறித்து எடுங்கள். அதை கையில் உள்ள கரண்டியால் நன்கு கொத்திவிட்டு, அதில் நாலைந்து கருவேப்பிலையை நன்கு கசக்கி போட்டு புரட்டு விட்டு தீயை அணைத்து விடுங்கள்.

தேங்காய் எண்ணெய் மணமும், கறிவேப்பிலை வாசமும் முட்டை பிரட்டுக்கு ஒரு வித சுவையை கொடுக்கும்.

இது செய்ய உம்மா, பொண்டாட்டி எல்லாம்.தேவையில்லை நாமலே 5 நிமிடத்தில் அருமையாக செய்து விடலாம். நீங்களும் சாப்பிட்டு ருசித்து மகிழுங்கள்.

அன்புடன் உங்களின் சகோதரன்
கீழை ஜமீல் முஹம்மது.

Tags: ,

Leave a Reply