ஒன்றாம் வகுப்பு ஆசிரியர்

நெஞ்சே நெனவிருக்கர்
நினைவே நெஞ்சிலிருக்கா?

அரைக்கால் சட்டை
அடியெல்லாம் ஓட்டை

சிறுபிள்ளை பிராயமதில்
செருப்பில்லா நடைபயணம்

பால்வடியும் பருவமதில்
பால்வாடி பயிலகம்

வரிசையா ஒக்காந்து
வாய்பாடு படிச்சமே

பள்ளிக்கொடம் போவாம
அடம் புடிக்கையிலே

குஉடையிலே தூக்கி சுமந்த
கிளவி முகம் நெனவிருக்கா?

நெல்லிக்காயோட மிளகாப் பொடி
களாக்காயோட உப்புத் தூள்

அரை நெல்லிக்கா(ய்)
ஊற வெச்ச நெல்லிக்கா(ய்)

இலந்தப் பழ ஸ{சு
மைமுனம்மா க(i)ட நினைவிருக்கா
மன்சுர் மிட்டாய் க(i)ட நெனவிருக்கா

பாலுவாடி முடிஞ்சி பள்ளிவாசல் பள்ளியில
பாதத்தை பதிச்ச நாள் நெனவிருக்கா

‘அ’ னா சொல்லிக் குடுத்த
அவரஞ்சி டீச்சர் மறந்திடுமா?

சிலேட்டு குச்சி சாக்பீஸ் தின்ற
சுவை இன்னும் நாவிலிருக்கா?

அத பார்த்து விட்டும் அடிக்காத
அந்த அவரஞ்சி அம்மா நினைவிருக்கா

தும்பை நிற வெள்ளை உடையில்
தினம் கல்வி கற்பித்த அந்த

அதிகாலை வெண்ணிலா முகம்
அதை நான் மறப்பேனா?

எதையும் மறக்க வில்லை
இனி மறப்பதற்கும் இல்லை

ஏறத்தாழ இருபதாண்டு கால ஞாபகம்
அலைபேசியின் பொத்தானை அழுத்தி

அம்மா நான் தான் உங்கள் மாணவன்
ஒன்னாம் வகுப்பு உங்களிடம் பயின்றவன்

நானென்ன உங்களின் ஒற்றை பிள்ளையா
ஞாயிறு ஒளி தருவது உலகிற்கே யல்லவா

அந்த பகலவனால் ஒளியேற்கை பெற்ற
ஓர் தாவரம் ஓர் மலர்

அறியக் குஉடும் அந்தச் சூரியனை
ஆதவன் எங்ஙனம் அறிவான்

வானத்தின் நிலவு உலகிற்கே தெரியும்
வையத்தார் யாவரும் நிலவிற்கு ஒன்றுதான்

முதுவை ஹிதாயத்தின் தயவில் தங்கள்
முகம் தன்னை கண்டுகொண்டேன்

இனிய குரலையும் கேட்டுக் கொண்டேன்
இருபதாண்டு கால ஆவலுக்கு ஓர் வடிகால்

கண்களால் காண்பதற்கு விழைகிறேன்
கவிதை சிறகினை விரித்துவிட்டேன்

இருபதாண்டுகளை என் இறகானது
இரு நொடிகளிலேயே கடந்து விட்டது

இதோ உங்கள் பார்வையின் முன்னால்
என் வழிப்பயணம் தொடர்கிறது.

முதுவை சல்மான்
ரியாத் – சவுதி அரேபியா
00966-509342070

From: Muduvai Salman

Leave a Reply