ஐ.டி.ஐ. மாணவர் தூக்கிட்டுத் தற்கொலை

முதுகுளத்தூர் அருகே தேரிருவேலி கிராமத்தில் ஐ.டி.ஐ. படித்து வந்த மாணவர், செவ்வாய்க்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.

தேரிருவேலி கிராமத்தைச் சேர்ந்த ஜெயராஜ் மகன் அஜித்குமார் (17). இவர், முதுகுளத்தூரில் உள்ள  தனியார் ஐ.டி.ஐ. யில் 2 ஆம் ஆண்டு படித்து வந்தார்.

சம்பவத்தன்று, மாணவர் கல்லூரிக்குச் செல்லாமல்  இரு சக்கர வாகன பழுதுநீக்கும் கடையில் வேலை பார்த்து வந்துள்ளார். இதனையறிந்த பெற்றோர் படிக்கச் சொல்லி திட்டியுள்ளனர்.

இதனால் மனமுடைந்த அஜித்குமார், வீட்டில் தனியாக இருந்தபோது தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். இது குறித்து, தேரிருவேலி போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

Tags: , , ,

Leave a Reply