ஏழைகளுக்கு அளிக்கப்படும் நிதி உதவியை ரூ.2 லட்சத்தில் இருந்துரூ.5 லட்சமாக மத்திய அரசு உயர்த்தி உள்ளது

ஏழைகளுக்கு அளிக்கப்படும் நிதி உதவியை ரூ.2 லட்சத்தில் இருந்துரூ.5 லட்சமாக மத்திய அரசு உயர்த்தி உள்ளது

 

கடந்த 1997-ம் ஆண்டு, ராஷ்டிரீய ஆரோக்கிய நிதி என்ற திட்டத்தை மத்திய அரசு தொடங்கியது. இதயம், கல்லீரல், சிறுநீரகம், புற்றுநோய்போன்ற உயிருக்கு ஆபத்தான நோய்களால் பாதிக்கப்பட்ட, வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழும் ஏழை நோயாளிகளின் உயிர் காக்கும் அறுவைசிகிச்சைக்காக, தலா ரூ.2 லட்சம் நிதி உதவி, இந்த திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டு வருகிறது.

அந்த நோயாளிகள், மத்திய அரசின் எந்த சூப்பர் ஸ்பெஷாலிட்டி ஆஸ்பத்திரியிலோ அல்லது அரசின் இதர ஆஸ்பத்திரிகளிலோ சிகிச்சைபெறலாம். இத்திட்டத்தின் மூலம், இதுவரை 37 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நோயாளிகள் பலன் அடைந்துள்ளனர்.

இந்நிலையில், ராஷ்டிரீய ஆரோக்கிய நிதி திட்டத்தின் கீழ், ஏழைகளுக்கு அளிக்கப்படும் நிதி உதவியை ரூ.2 லட்சத்தில் இருந்து ரூ.5லட்சமாக மத்திய அரசு உயர்த்தி உள்ளது. இதன்மூலம், சிகிச்சைக்கான நடைமுறை தாமதம் தவிர்க்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.அத்துடன், ஆண்டுதோறும் கூடுதலான நோயாளிகள் பலன் அடைவார்கள்.

ஏழை நோயாளிகளுக்கு நிதி உதவி அளிப்பதற்காக, 12 மத்திய அரசு ஆஸ்பத்திரிகளில், ரூ.50 லட்சம்வரை சுழல் நிதி அமைக்கப்பட்டுள்ளதாகமத்திய அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

இந்த நிதி உதவி உயர்த்தப்பட்டதை தொடர்ந்து, ரூ.5 லட்சத்துக்கு மேல் நிதி உதவி தேவைப்படும் நோயாளிகளுக்கு மட்டுமே, மத்தியசுகாதார அமைச்சகத்தின் ஒப்புதல் தேவைப்படும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது. மற்ற நோயாளிகளுக்கு நேரத்தின் அருமை கருதி, அந்தந்தமத்திய அரசு ஆஸ்பத்திரிகளே நிதி உதவியை வழங்கி, சிகிச்சையை தொடங்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.

 

 

Tags: ,

Leave a Reply