எஸ். ராமகிருஷ்ணனுடன் கலந்துரையாடல்

எஸ். ராமகிருஷ்ணனுடன் கலந்துரையாடல்
22-10-2017, ஞாயிறு, மாலை 5.30 மணிக்கு.
 
பியூர் சினிமா புத்தக அங்காடி, எண். 7, மேற்கு சிவன் கோவில் தெரு, வடபழனி, வாசன் ஐ கேர் அருகில், விக்ரம் ஸ்டுடியோ எதிரில், டயட் இன் உணவகத்தின் இரண்டாவது மாடியில்.
நண்பர்களே தமிழ் சினிமாவின் நூற்றாண்டை கொண்டாடும் விதமாக தமிழ் ஸ்டுடியோ தொடர்ச்சியாக, சினிமாவின் வெவ்வேறு பிரிவுகளை சேர்ந்த நூறு கலைஞர்களுடன் கலந்துரையாடும் நிகழ்வை நடத்தி வருகிறது. தமிழ் சினிமா இலக்கியத்தை எவ்விதம் அணுகியிருக்கிறது, இலக்கியம் சினிமாவிற்கு எவ்விதம் தேவைப்படுகிறது, இயக்குனர்கள் உள்ளிட்ட தொழில்நுட்ப கலைஞர்கள் வாசிக்க வேண்டியதன் அவசியம் என்ன? என்பது போன்ற விவாதங்கள் நடைபெறும். சினிமாவும் இலக்கியமும் என்கிற தலைப்பில் எஸ். ராமகிருஷ்ணனுடன் பார்வையாளர்கள் கலந்துரையாடலாம். அவசியம் அனைவரும் வருக…


அன்புடன் 


தமிழ் ஸ்டுடியோ.காம் (பதிவு எண்: 475/2009)

www.thamizhstudio.com

 

Tags: ,

Leave a Reply