எழுந்து வா

எழுந்து வா

எடுத்துக்காட்டுக்காகத்தான்
எழுதினேன்-உன்
அயராத உழைப்பையும்
அஞ்சாத துணிவையும்!

உழைத்தது போதுமென்றுதான்
ஓய்வெடுத்துக் கொண்டாயோ?
கனவுகாணும் இளஞைர்களைக்
கண்ணீரில் ஆழ்த்திவிட்டாயே!

பூமியில் இருந்து கொண்டு
விண்வெளி ஆராந்தாய்!
எதைஆராய்வதற்கு
விண்வெளி சென்றாய்?

அக்னிச்சிறகுகளத் தந்துவிட்டு
எங்கேநீ பறந்து போனாய்?
ஏவுகணையைத் தந்துவிட்டு
எதிலேறிச் சென்றதுன் ஆத்மா?

மாற்றுத்திறனாளிகளுக்கு
மறுவாழ்வு கொடுத்தாய்!-நீ
மறுபடியும் எப்போது வருவாய்?

தூங்கவிடாத கனவுகளைக்
காணச்சொன்னாயே,
தொடர்ந்து தூங்கிக்கொண்டிருக்கிறாயே?

எழுந்து வா! உன்னை
இழந்தது கனவாகட்டும்.
தொடங்கிய பேச்சை
முடிக்க வேண்டும்!

இந்தியா வல்லரசாகும்போது
இணைந்திருக்க வேண்டும்
இளஞைர்களோடு!
எழுந்து வா!!

கண்ணீருடன்
காரைக்குடி. பாத்திமா ஹமீத்
ஷார்ஜா

Tags: ,

Leave a Reply