என்ன கொண்டு வந்தோம்?

உறங்கிக் கிடக்கும் கல்லறையில்
இறந்துபோன மனிதர்கள்
என்னகொண்டு வந்தார்கள்?
எதையெடுத்துச் சென்றார்கள்?

இறைவன்தந்த இனியவாழ்வில்
ஏழைகளைக் கண்டால்
எகத்தாளம் ஏன்?
பணக்காரனைக் கண்டால்
பணிவு ஏன்?

போதுமென்ற மனம்படைத்தவன்
பெரும் பணக்காரன், கோடியிருந்தும்
போதாதென்பவன் படுபிச்சைக்காரன்!

போட்டியும் பொறாமையும் கொண்டு
பிறவிப்பயனை வீணாக்கவேண்டாம்,
அன்பாலும் கருணையாலும்
ஆனந்தவாழ்வாக மாற்றவேண்டும்!

காரைக்குடி. பாத்திமாஹமீத்
ஷார்ஜா

Tags: 

Leave a Reply