உலக பார்வையாளர்களைக் கவர்வதில் முன்னணி வகிக்கும் அபுதாபி ஷேக் ஸையித் பள்ளிவாசல்

உலக பார்வையாளர்களைக் கவர்வதில் முன்னணி வகிக்கும் அபுதாபி ஷேக் ஸையித் பள்ளிவாசல்

அபுதாபி : அபுதாபியில் அமையப்பெற்றுள்ள ஷேக் ஸையித் பள்ளிவாசல் உலக பார்வையாளர்களைக் கவர்வதில் முன்னணி வகித்து வருகிறது. 2012 ஆம் ஆண்டு மட்டும் இப்பள்ளிவாசலுக்கு 4.6 மில்லியன் மக்கள் வருகை புரிந்துள்ளனர்.

ஷேக் ஸையித் பள்ளிவாசலின் கட்டிடக் கலை காண்பவர் மனதை கொள்ளை கொள்வதாக இருந்து வருகிறது.

இப்பள்ளிவாசலில் 82 கூம்புகள் (domes), 24 காரட் வடிவ சாண்டிலையர் எனும் விளக்குகள், உலகின் மிகப்பெரிய கையினால் தயாரிக்கப்பட்ட கார்பெட் உள்ளிட்டவை இதன் சிறப்பம்சங்களாகும்.

2007 ஆம் ஆண்டு ஹஜ் பெருநாளின் போது இப்பள்ளிவாசல் தொழுகைக்காக திறந்து வைக்கப்பட்டது.

இப்பள்ளிவாசலை சுற்றுலாப் பயணிகள் பார்வையிட வசதியாக வெள்ளிக்கிழமை காலை தவிர மற்ற நாட்களில் காலை 10 மணி முதல் மணிக்கொருமுறை சுற்றுலா வழிகாட்டியுடன் செல்லலாம்.

இப்பள்ளிவாசல் குறித்து மேலதிக தகவல் அறிய உதவும் இணையத்தளம்

http://www.szgmc.ae

Tags: , ,

Leave a Reply