உறக்கம் !

உறக்கம் !

 

இரவின் தூரியில் 

தூங்கும் குழந்தை.

 

குறட்டை எஞ்சின் 

சத்தமிட்டு இழுத்துச்செல்லும் 

தொடர்வண்டி !

 

கனவுப் படகு 

மிதந்து செல்லும் 

கருப்பு நதி!

 

உடம்பு  திரையரங்கில் 

ஓடும் இரவுக்காட்சி !

 

கண்கள் மூடி பயணிப்பதால் 

நிகழும் கிட்டத்தட்ட 

மரணம் !

 

புதிய தம்பதியருக்கு 

தமிழில் பிடிக்காத 

ஒரே வார்த்தை !!

                    – கவிஞர்.அப்துல் வதூத் 

                          துபாய் 

 

Tags: 

Leave a Reply