உன் நினைப்பில் …………

இணைப்பில் வந்த நீ எங்கே ………… சென்றாய் …?

 

 

ஆக்கம் :

தமிழ்மாமணி கவிஞர் மு சண்முகம் (எ) ஹிதாயத்துல்லாஹ்

இளையான்குடி

 

 • சென்னை பச்சையப்பன் கல்லூரிக்கு

தமிழால்

பசுமை பாய்ச்சியவனே ……!

 • குணநலம் அறிவோர் மத்தியில்

மனநலமும் அறிந்த மருத்துவனே ….!

 • பேராசிரியர் பெரியார்தாசனே !
 • கடவுள் பேரால் ஜாதிகளின் பேரால்

மோதிக் கொள்ளும்

கயமைக்கு முற்றுப்புள்ளி வைக்க

 • பகுத்தறிவு தந்தை பெரியார் இயக்கத்தில்

இணைந்த பேரன்பே !

 • காலச் சுழற்சியில் ………….

தீனில் இணைந்தாய் ……………. தித்திப்பாய் !

 • அப்துல்லாஹ்வாக ஆனாய் !
 • உன் பணிகள் அண்ணாந்து பார்க்க வைத்தன

அதற்குள்

 • மரணத்திற்கு என்ன அவசரமோ ………….. தெரியவில்லை !

வேகமாய்………… வந்து உன்னைப் பறித்துப் போனதே …….!

எங்கள் விழிக்குடத்தை ………..

உடைத்துப் போனதே ………..!

 • உன் ஆன்மா ……….. சாந்தி பெறட்டும் !
 • இதுவரை, உன் இணைப்பில் இருந்த நான் ………

இப்போது உன் நினைப்பில்

Tags: 

Leave a Reply