உன்னால் முடியும்

மூமினான பெண்ணே !
உன்னால் முடியும் கண்ணே !
சாதனைகள் படைப்போம்
சோதனைகளைத் தவிர்ப்போம் !
புன்னகையால் புதியதோர்
உலகம் படைப்போம் !
பார்போற்ற வாழ்வோம்
பௌத்திரங்கள் செய்வோம் !
அன்பால் அகங்காரம் வெல்வோம் !
அடக்கத்தால் அதிகாரம் தீர்ப்போம் !
பாசத்தைக் கொடுத்து
உயிரிகளிடத்தில் நேசம் வளர்ப்போம் !
கருணையைக் கண்களில் கொண்டு
கவலையைத் துரத்துவோம் !
இறைக் கொள்கைகளையும் இனிய நபி வாழ்வையும்
உயிர் மூச்சாக நாம் கொண்டு
சான்றோன் என நம்பெற்ற தாய் கேட்க !
என்நோற்றான்கொல் என நம் தந்தை மகிழ
வெற்றிகளின் பின் என்மனைவியென
கணவன் வாழ்த்த – தாயின் காலடியில்
சொர்க்கமதை நம் குழந்தைகளுணர
வாழ்ந்து காண்பிக்க வேண்டும்
மூமின்நான் சிறந்தவளென்று !
சிறப்புப் பெறும் வரை உனை வாழ்த்தும்
—–
காரைக்குடி பாத்திமா ஹமீத், சார்ஜா
Tags: 

Leave a Reply