ஈர நிலம்

நியாயவான்
நட்பின் நீதிபதி
உலக்கையில் ஏது திசை
உன் நட்பில் ஏது துருவம்

நட்பே உந்தன் நிறம்
நண்பா உனது இதய நிறம்
வானத்தின் வெண்ணிலவு
வையகத்தின் ஆழ்கடல்

தேனின் தீஞ்சுவை
தேனீயின் சுடுகோபம்
காற்றிலோ கடும் வெப்பம்
கடலிலோ அனற் காற்று

கிணற்றடி தூர்ந்த கிணறு
ஓட்டை வாளி உலகமே தெரிகிறது
வலக் கை ஓலக்கை
இடக் கை அகற்றப்பட்டுவிட்டது

நீர்வேண்டி நெடும்பயணம்
பயிர் காய்கிறது
ஏழையின் வயிறாய்
ஏற்றம் உடைந்து விட்டது
ஏரில் பூட்டிய காளை அசையாது

வயிறு ஒட்டிவிட்டது
வாய் உலர்ந்து விட்டது
கன்று பசுவிடம் மடுதேட
காலிடை மடுவே இல்லை மதுரம் ஏது

எல்லாம் இருந்தும்
எதுவும் இல்லை
உண்டா என்றால்
உண்டென்று சொல்லிடவா
உள்ளது எனினும் இல்லை
என்றிடவா?

என்னிடம் உள்ளது
ஒன்றே ஒன்றுதான்
என்னுள்ள
என் நட்பு
எதுவும் காய்ந்துவிடும்
எல்லாம் வறண்டாலும்

என்னுள் என்னுள்ளம்
இளம் பச்சை நிறம்
ஈரத்தலம்
பாசம் கொண்டது
என்னுள் என் நண்பா
வழுவாதிரு
இது ஈரநிலம்.

நண்பன் முதுவை சல்மான்
ரியாத்

Leave a Reply