இஸ்லாமிக் பயிற்சி மையம்

அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)
இஸ்லாமிக் பயிற்சி மையம், முதுகுளத்தூர்;

  இஸ்லாமிக் பயிற்சி மையத்தில் இந்த ஆண்டு முதல் 11,12 ஆம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கும் இலவச டியூசன் ஆரம்பிக்கப்பட உள்ளது. அதனால் 11,12 ஆம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கான பெற்றோர். ஆசிரியர் கூட்டம், ஊளுஊ கம்யூட்டர் சென்டரில் 30.06.2010 புதன் கிழமை மாலை 5.30 மணிக்கு நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் 11,12 ஆம் வகுப்பு மாணவ- மாணவிகளும் அவர்களது பெற்றோர்களும் கலந்து கொள்கின்றனர். அவர்களிடம் நமது நோக்கம் மற்றும் இலக்கு எடுத்துரைக்கப்படவுள்ளது.

  இக்கூட்டம் ஹாஜி.மௌலவி.யு.அஹமது பஷீர் சேட் ஆலிம் தலைமையில் நடைபெறுகிறது.

ஹாஜி.மௌலவி.யு. உமர் ஜஃபர் ஆலிம், ஜக்கிய முதுகுளத்தூர் கல்வி அறக்கட்டளை ஆடிட்டர் யு. காதர் முகைதீன் என்ற ஹீமாயூன், ஜக்கிய முதுகுளத்தூர் முஸ்லீம் ஜமாத் உறுப்பினர் யு.காஸ்ஸாலி மற்றும் ஆசிரியர்கள் N.குரைசி, ளு.அகமது மீரா, யு.ஹபீப் முகம்மது, ஏ.சசிக்குமார் ஆகியோரும் கலந்து கொள்கின்றனர். கூட்டத்திற்கான அனைத்து ஏற்பாடுகளையும் பயிற்சி மைய முதல்வர் ஹெச்.ஏ. முகம்மது சுல்தான் அலாவுதீன் செய்துள்ளார்.

Tags: ,

Leave a Reply