இளம் ஆலிம்களே! உங்களைத்தான்!

– அ. முஹம்மது கான் பாகவி

 

ரபி மத்ரஸாக்களின் மாணவக் கண்மணிகளேகுர்ஆனியகலைகள் நம் பார்வையில் ஐந்து என முந்தைய தொடரில்குறிப்பிட்டிருந்தோம்அதில் முதலாவதுதிருக்குர்ஆனைத்திருத்தமாகவும்இராகமாகவும் ஓதக் கற்பிக்கின்ற ‘தஜ்வீத்’ எனும்கலையாகும் என்றும் விவரித்திருந்தோம்.

திருக்குர்ஆன் மனனப் பிரிவு

அடுத்து இரண்டாவதுதிருக்குர்ஆனைத் தவறோ தடுமாற்றமோ இல்லமால்மனனம் செய்கின்ற அற்புதமான கலைபொதுவாக எல்லா முஸ்லிம்களும்குர்ஆனின் சில பகுதிகளையேனும் மனனம் செய்திருக்க வேண்டும்.அப்போதுதான்தொழுகைகளில் குர்ஆன் அத்தியாயங்களை (சூராஓதி,முறையாகத் தொழுகையை நிறைவேற்ற இயலும்.

குர்ஆனின் தோற்றுவாயான ‘அல்ஃபாத்திஹா’ எனும் முதல்அத்தியாயத்தை ஓதாதவருக்குத் தொழுகையே இல்லை” என நபி (ஸல்)அவர்கள் கூறினார்கள். (புகாரீ – 756)

அது மட்டுமன்றிநபித்தோழர் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலிஅவர்கள்கூறினார்கள்:

இறைமறையில் ஒன்றுமே இல்லாத உள்ளம்குடியிருப்பவர் இல்லாதஇல்லம் போன்றதுஅந்த இல்லம் சிதிலமடையும்அந்த உள்ளமும்சிதிலமடையும். (தாரிமீ)

இதன்றிமுழு குர்ஆனையும் முறையாக மனனம் செய்துதொடர்ந்துஓதிவருபவர்களுக்குத் தனிச்சிறப்பு உண்டுநபித்தோழர் அபூஉமாமா (ரலி)அவர்கள் கூறினார்கள்:

குர்ஆனை (மனனமாகஓதிவாருங்கள்இந்தப் பிரதிகள்தான்இருக் கின்றனவே! (பார்த்து ஓதிக்கொள்வோம்என ஏமாந்துவிடவேண்டாம்ஏனெனில்குர்ஆனை மனனம் செய்த இருதயத்தைஅல்லாஹ் நிச்சயமாக ஒருபோதும் வேதனை செய்யமாட்டான். (தாரிமீ)

நபி (ஸல்அவர்கள் கூறினார்கள்:

குர்ஆனை நன்கு மனனமிட்டுத் தங்குதடையின்றி ஓதுகின்றவர்,கண்ணியம் நிறைந்த தூதர்(களான வானவர்)களுடன் இருப்பார்.குர்ஆனை (மனனம் செய்திராவிட்டாலும் அதைசிரமத்துடன் திக்கித்திணறி ஓதிவருகின்றவருக்கு இரு மடங்கு நன்மைகள் உண்டு. (முஸ்லிம் – 1462)

ஆகதிருக்குர்ஆனை மனனமிட்ட ஹாஃபிள்கள் வானவர்களுடன் இருக்கும்மரியாதையைப் பெறுகிறார்கள்மறுமையில் ஹாஃபிள்களுக்குக் கிடைக்கும்மாபெரும் தகுதியைப் பாருங்கள்நபி (ஸல்அவர்கள் கூறுகிறார்கள்:

குர்ஆனை மனனமிட்டவர் சொர்க்கத்தினுள் நுழையும்போது, “ஓதுங்கள்! (படித்தரங்களில்ஏறிக்கொண்டே இருங்கள்” என்று கூறப்படும்.அவ்வாறேஅவரும் ஓதுவார்ஒவ்வொரு வசனத்திற்கும் ஒருபடித்தரத்தில் ஏறிக்கொண்டிருப்பார்அவருக்கு மனனமாக உள்ள கடைசிவசனத்தை ஓதுகின்றவரை. (இப்னுமாஜா)

மனனப் பிரிவில் இருக்கும் மாணவர்களேஅல்லாஹ்விடம் உங்களுக்குள்ளமரியாதையைப் பார்த்தீர்களாநன்கு தஜ்வீதுடன் தடுமாற்றமின்றி,பிழையின்றிமனனம் செய்யுங்கள்வசனங்களின் வரிசைக் கிரமம்மாறிவிடாமல்ஒரே சொல் மறுபடி வரும் இடத்தில் குழப்பமடைந்துவிடாமல்,உச்சரிப்பில் குளுறுபடி நேராமல்உருப்போடும்போதே மிகச் சரியாகவும்தரமாகவும் உள்ளத்தில் பதியச் செய்துவிடுங்கள்.

புனித ரமளானில் மட்டும் பயிற்சி எடுப்பதுமற்ற நாட்களில் தளர்ச்சிஅடைவது என்று இருந்துவிடாதீர்கள்ஏனெனில்மறப்பதில் குர்ஆனுக்கேமுதலிடம் என்றுதான் சொல்ல வேண்டும்நபி (ஸல்அவர்கள்எச்சரிக்கிறார்கள்:

குர்ஆனை (ஓதி அதைகவனித்துவாருங்கள்ஏனெனில்என் உயிர்எவன் கையிலுள்ளதோ (ந்த இறை)வன் மீதாணையாககயிற்றில்கட்டி வைக்கப்பட்டுள்ள ஒட்டகத்தைவிட மிக வேகமாக குர்ஆன்(நினைவிலிருந்துதப்பக்கூடியதாகும். (புகாரீ-5033)

குர்ஆன் மொழிபெயர்ப்பு:

திருக்குர்ஆன் கலைகளில் நாம் கற்க வேண்டிய மூன்றாவது கலை,திருக்குர்ஆனின் வசனங்களுக்கான பொருளை அறிவதாகும்குர்ஆனைப்பார்த்து ஓதவும் மனனம் செய்யவும் முடிந்த ஒருவருக்கு அதன் அர்த்தம்தெரியாது என்பது எவ்வளவு பெரிய இழப்புகையில் கருவூலத்தைவைத்துக்கொண்டுஅதை அனுபவிக்காமல் சுவைக்காமல் எடுத்தெடுத்துப்பார்த்துவிட்டுத் திரும்ப அதே இடத்தில் வைத்துப் பூட்டுகின்ற மனிதனுக்கும்உங்களுக்கும் என்ன வித்தியாசம்?

இன்றெல்லாம்பொருள் அறிந்து குர்ஆனை ஓத வேண்டும் என்ற ஆர்வம்சாதாரண பொது மக்களுக்கே உருவாகியிருப்பதைப் பார்க்கிறோம்இதற்காகநடக்கும் சிறப்பு வகுப்புகளுக்கு வயதானவர்களும் இளைஞர்களும்படையெடுக்கிறார்கள்வாய்ப்பு இல்லாதவர்கள் மொழிபெயர்ப்புகளைவாசித்துத் தங்கள் அறியாமையை அகற்றிக்கொள்கிறார்கள்இன்னும் சிலர்,தொழுகைக்குப்பின் வாசிக்கப்படும் மொழிபெயர்ப்பைக் கேட்டுப்பயனடைந்துவருகிறார்கள்.

அப்படியிருக்கமத்ரஸா மாணவர்கள் இதில் எவ்வளவு கவனம் செலுத்தவேண்டும் என்பதைச் சொல்லவும் வேண்டுமாபொருள் தெரியாமல் பொதிசுமப்பதற்கு நாமென்ன இஸ்ரவேலர்களா?

திருக்குர்ஆனில்அதை அருளியவன் அறைகூவல் விடுக்கின்றான்:


உறுதியாகஇந்த குர்ஆனை அறிவதற்கு எளிதாக்கியுள்ளோம்.படிப்பினை பெறுபவர் உண்டா? (54:17)

இதுகுர்ஆனை ஓதமனனம் செய்யபொருள் அறிய.. என எல்லாவற்றையும்குறிக்கும்குர்ஆனின் சொல்லையும் பொருளையும் அறிவிதைஎளிதாக்கியுள்ளோம்யார் அதை நாடி முயல்கிறாரோ நிச்சயமாக அவருக்குஅது சாத்தியப்படும்.

அவ்வாறேநபி (ஸல்அவர்கள் கூறினார்கள்

உங்களில் மேலானவர் யாரெனில்குர்ஆனைத் தாமும் கற்று,பிறருக்கும் கற்பிப்பவர்தான் (புகாரீ – 5028)

இதனாலேயேசில அரபிக் கல்லூரிகளில் குர்ஆன் மொழிபெயர்ப்புக்கு மட்டும்தனியாக நேரம் ஒதுக்கப்படுகிறதுபெரும்பாலும் அரபி மொழிஅரபிஇலக்கணம் அறிந்த பிறகே இவ்வகுப்பு நடத்தப்படும்மொழிபெயர்ப்பைக்கற்கும் முறை என்ன என்று பார்ப்போம்.

முதலில் வசனங்களில் இடம்பெறும் புதிய சொற்களுக்குப் பொருள் புரியவேண்டும்குறிப்பேட்டில் பதிந்துகொள்ள வேண்டும்அச்சொல்லின்வேர்ச்சொல்லைக் கண்டுபிடித்து அதன் பொருளைக் குறித்தால் போதும்அதன்வினைவடிவங்களையும் வாய்ப்பாடு வினையெச்சங்களையும் (சீஃகாவஸ்ன்)இலக்கணப் பாடத்தை நினைவுகூர்ந்து அறிந்துகொள்ள முடியும்.

.காஇக்கா(க்) நஅபுதுஇதில்நஅபுது نعبد என்பதன் வேர்ச்சொல் (மஸ்தர்)இபாதத்இதன் பொருள்வழிபாடுபின்னர் ‘நஅபுது’ எனும் வினைவடிவம்நிகழ்கால தன்மைப் பன்மை ஆகும்அப்படியானால், ‘வழிபடுகிறோம்’ என்பதுபொருளாகும் என்பதை இலக்கண அறிவு சொல்லிக்கொடுத்துவிடும்.பிறகென்னஇய்யா(க்) – என்பதற்கு ‘உன்னை’ என்று பொருள்இதுசெயப்படுபொருள் (மஃப்ஊல்). பின்னால் இடம்பெற வேண்டிய இதுமுன்னால்இடம்பெற்றதால்பொருளில் அழுத்தம் கொடுக்கும்எனவே, ‘உன்னையேஎனப் பொருள் செய்யவேண்டும் என்பதும் உங்களுக்குத் தெரிந்துவிடும்.

அடுத்து தனிச் சொற்களைஇலக்கணம் அறிந்து இணைத்து மொத்தவாக்கியத்திற்கான பொருளை அறிய வேண்டும். “உன்னையே வழிபடுகிறோம்என்பதுதான் மேற்சொன்ன (1;5ஆவதுவசனத்தொடரின் அர்த்தம் என்பதுபுரிந்துபோகும்.

திருக்குர்ஆன் விரிவுரை

குர்ஆனிய கலைகளில் நான்காவதுஅதன் விளக்கவுரை (தஃப்சீர்).மொழிபெயர்ப்பில் பொருள் மட்டுமே நமது இலக்கு என்பதால்வசனத்தின்மேல்விளக்கம் புரிய வாய்ப்பில்லைஆனால்தஃப்சீரில் நீங்கள் அறியவேண்டியது நீண்ட விளக்கமாகும்ஒரு வசனத்தின் கருத்துஅதுஅருளப்பெற்ற பின்னணிஅது சொல்லும் வரலாறுஅல்லது அறவுரை,அல்லது சட்டம்அது குறித்த இஸ்லாமிய அறிஞர்களின் கருத்துகள்.. முதலானவிவரங்களை எடுத்துரைப்பதே தஃப்சீர் ஆகும்.

திருக்குர்ஆனின் பிரபலமான அரபி விரிவுரைகளில் ஒரு போக்கு உண்டுஒருவசனத்திற்கு இன்னொரு வசனத்தைக் கொண்டு விளக்கம் அளிப்பார்கள்இந்தவசனம் எந்தப் பொருள் குறித்துப் பேசுகிறதோ அதே பொருள் வேறொருவசனத்தில் விரிவாகப் பேசப்பட்டிருக்கும்அல்லது இந்த வசனத்தின்பூடகத்திற்கு மற்றொரு வசனம் தெளிவைத் தரும்அல்லது இதன் பின்னணிஅதில் தெரியவரும்.

அடுத்து திருக்குர்ஆன் வசனத்திற்கு நபிமொழியில் விளக்கம் கிடைக்கும்.எனவேஅவ்வசனம் தொடர்பான நபிமொழிகளை அறிதல் வேண்டும்நபிமொழிகளில் வசனத்தின் கருத்து மட்டுமன்றிஅதிலிருந்து கிடைக்கும்பாடம்நடைமுறைப்படுத்தல்வசனத்தில் நமக்கு எழும் ஐயத்திற்கான விடைமுதலான அரிய தகவல்களும் கிடைக்கும்.

அடுத்து நபித்தோழர்கள்இமாம்கள்சான்றோர்கள்விற்பன்னர்கள் ஆகியோர்அளித்திருக்கும் விளக்கங்களைப் படித்தறிய வேண்டும்மொழி வல்லுநர்கள்,இலக்கிய மேதைகள்வரலாற்றாசிரியர்கள்சட்ட அறிஞர்கள் கூறும்நுணுக்கங்களையும் தேடிப் பிடித்துப் படிக்க வேண்டும்.

இதவெல்லாமேவசனத்தின் உள்ளீட்டை உள்வாங்க உதவும் காரணிகளாகும்.வசனத்தின் பொருளை மட்டும் மேலோட்டமாகப் பார்த்துவிட்டுவசனம்சொல்ல வரும் தகவல் இதுதான் எனஅவசரப்பட்டுத் தீர்மானித்துவிடக்கூடாதுஎந்தத் துறையானாலும்துறை சார்ந்த அறிஞர் பெருமக்கள்,ஆராய்ச்சியாளர்கள்அனுபவசாலிகள் ஆகிய மூத்தோரின் கருத்துகளைக்கவனத்தில் கொள்வது அவசியமாகும்.

மாணவச் செல்வங்களேஇதைப் பார்க்கும்போது உங்களுக்குப் பிரமிப்பாகவும்மலைப்பாகவும் தோன்றலாம்வகுப்பறையில் ஆசிரியர் சொல்லிக்கொடுப்பதுகொஞ்சம்தான்அதையும் தவறவிடாமல் குறிப்பெடுத்துக்கொண்டுமேல்விளக்கங்களை இயன்றவரை நீங்கள்தான் பெரிய நூல்களில் தேட வேண்டும்.

திருக்குர்ஆன் ஒரு ஆழ்கடல்அதுவும் வற்றாத சமுத்திரம்அள்ளஅள்ளவந்துக்கொண்டிருக்குமே தவிரதீர்ந்துபோகாதுநம்முடைய சிற்றறிவெனும்குழாய் மூலம் உறிஞ்சுவதால் எவ்வளவு நீர் கிடைத்துவிடப் போகிறது?அதற்காக கையளவுகூட அள்ளமாட்டேன் என்று – நேரத்தின்மீது பழிபோட்டு –சுற்றிக்கொண்டிருந்தால்குர்ஆனின் ஒரு துளி ஞானம்கூட பெறாதபேதைகளாகிவிடுவோம்இழப்புகடலுக்கு அல்லநதிக்கு அல்லதாகமும்தேவையும் உள்ள நமக்கே இழப்பு!

திருக்குர்ஆன் எனும் வற்றா நதியில் மூழ்கி நீந்துங்கள்அந்தக் கடலின் ஆழம்சென்று முத்து எடுங்கள்சிப்பிதான் கிடைக்கும்பக்குவமாகஅதை உடைத்துப்பாருங்கள்மின்னும் முத்து கண்களைக் கூசச் செய்யும்.


அவர்கள் இந்த குர்ஆனை ஆழ்ந்து சிந்திக்க வேண்டாமாஅல்லதுஉள்ளங்கள் மீது அதன் பூட்டுகள் உள்ளனவா? (47:24)

என அல்லஹ் கேட்கின்றான்இதுபொதுவான அறைகூவலாக இருந்தாலும்மார்க்க அறிவைத் தேடும் நமக்கல்லவா மிகவும் பொருந்தும்!

Tags: ,

Leave a Reply