இலவச கண் சிகிச்சை முகாம்

முதுகுளத்தூர் பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளி  நாட்டு நலப்பணி திட்டம் சார்பில் புதன்கிழமை மேலச்சிறுபோது கிராமத்தில் இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது.

முகாமுக்கு பள்ளித் தாளாளர் எம்.எஸ்.சௌகத்அலி தலைமை வகித்தார். தலைமையாசிரியர் ஓ.ஏ.முகம்மது சுலைமான் முகாமினை தொடங்கி வைத்தார்.

மேலச்சிறுபோது இந்தியன் மெட்ரிகுலேசன் பள்ளி தாளாளர் எஸ்.முகம்மது ரபீக், ஊராட்சி தலைவர் பி.கலைச்செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

உதவித் தலைமை ஆசிரியர் முகம்மது சுல்தான் அலாவுதீன், மேலச்சிறுபோது நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஏ.ஜேம்ஸ் ஆகியோர் சிறப்புரை ஆற்றினார். முகாமில் 95 பேர் கலந்து கொண்டனர்.

இதில் 13 பேருக்கு கண் அறுவை சிகிச்சை செய்வதற்காக ராமநாதபுரம் தலைமை மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்டனர். முகாமுக்கான ஏற்பாடுகளை ஆசிரியர் சொ.ஐயப்பன் செய்திருந்தார்.

முடிவில் என்.எஸ்.எஸ் திட்ட அலுவலர் எஸ்.சிக்கந்தர் நன்றி தெரிவித்தார்.

Tags: ,

Leave a Reply